தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ( entrepreneurship development and innovation institute) புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது அதில் ஒருபகுதியாக பேக்கரி பொருட்கள் தயாரிப்பு தொடர்பான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
வரும் ஆகஸ்ட் 7 ம் தேதியில் இருந்து 9 ம் தேதி வரையிலான மூன்று நாட்களுக்கு காலை 9.30 ல் இருந்து மாலை 6 மணி வரை , சென்னையில் உள்ள entrepreneurship development and innovation institute ல் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பேக்கரி பொருட்களை எப்படி தயாரிப்பது, அதற்கு என்னென்ன பொருட்கள் தேவை, என்னென்ன மிஷின்கள் தேவை, எப்படி பேக்கிங் செய்வது, எப்படி லேபிளிங் செய்வது , விலை எப்படி நிர்ணயம் செய்வது, மார்க்கெட்டிங் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
இதில் குறைந்தது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது பூர்த்தி அடைந்த ஆண் பெண் இருவருமே பங்கு பெறலாம். இதில் கலந்து கொள்ள பயிற்சி கட்டணமாக 5000 ரூபாய் செலுத்த வேண்டும். இதற்கு முன்பதிவு செய்ய www.editn.in என்ற இணையதளத்தில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் சந்தேகங்களுக்கு 8668102600/70101430022 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
0 Comments:
Post a Comment