இந்தியாவில் அதிகரித்து வரும் சீன பூண்டு விற்பனை - எச்சரிக்கும் மருத்துவர்கள்! - Agri Info

Adding Green to your Life

August 13, 2024

இந்தியாவில் அதிகரித்து வரும் சீன பூண்டு விற்பனை - எச்சரிக்கும் மருத்துவர்கள்!

 பூண்டு இந்திய சந்தையில் முக்கிய உணவு பொருளாக உள்ளது. உணவு மட்டுமின்றி மருத்துவ குணங்களும் சிறந்து விளங்குகிறது. இதனால் நமது நாட்டில் அனைவரது வீட்டிலும் பூண்டு நிச்சயமாக இருக்கும். இந்த நிலையில் சீனா தயார் செய்து ஏற்றுமதி செய்யும் பூண்டுகள் இந்தியாவில் அதிகரித்து வருவதாக வெளியான செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்த பூண்டு மற்ற பூண்டுகளை விட கவர்ச்சிகரமானதாக தோன்றுகிறது. ஆனால் மிகவும் தீங்கு விளைவிக்க கூடியதாகும். இந்த பூண்டு முக்கியமாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் பலர் இதை சீன பூண்டு என்று அழைக்கிறார்கள். உலகில் பூண்டு உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது. விற்பனை நோக்கில் தற்போது செயற்கையாக பூண்டை தயார் செய்து அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து லாபம் பார்த்து வருகின்றனர். இதனால் தற்போது இந்தியாவில் சீன பூண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் இன்னும் சீன பூண்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News18

இதுகுறித்து விளக்கும் காய்கறி விற்பனையாளர்கள், இந்த பூண்டு மிகவும் பெரியதாகவும், பார்க்க பளிச் என்று இருப்பதால் பலரும் இதனை வாங்க விரும்புகின்றனர் என்கிறார். இருப்பினும், இந்த சீன பூண்டு பல தீங்கு விளைவிக்கும் அம்சங்களை கொண்டுள்ளது. அதனால் இந்தப் பூண்டைப் பயன்படுத்துபவர்கள் பல பாதிப்புகளை சந்திக்கின்றனர். இந்த பூண்டை தொடர்ந்து பயன்படுத்துவதால் பல உடல் பிரச்சனைகள் ஏற்படும்.

இதுகுறித்து விளக்கும் மருத்துவர் சவுரப் சர்க்கார், சீன பூண்டு மற்ற பூண்டுகளை விட மிகவும் பெரியதாக இருக்கும். பூண்டு பற்கள் விரல்கள் போல் அடர்த்தியாக இருக்கும். இந்த பூண்டு வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும். இருப்பினும், இந்த பூண்டு மற்ற பூண்டுகளைப் போல கடுமையான வாசனையைக் கொண்டிருக்காது, லேசான துர்நாற்றத்துடன் இருக்கலாம். மேலும் இந்த பூண்டை வெள்ளையாக்க ப்ளீச் செய்யப்படுகிறது. இதனால் இந்த பூண்டை பயன்படுத்தினால் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கிறார்.


உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இந்த பூண்டு உற்பத்தியின் போது பல உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் வெள்ளையாக்க குளோரின் போன்ற இராசயங்களும், ஈயம் போன்ற உலோகங்களும் பயன்படுத்துகின்றனர். எனவே இந்த பூண்டை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இந்த சீன பூண்டில் மருத்துவ குணங்கள் எதுவும் இல்லை, மாறாக விஷதன்மை கொண்டதாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். எனவே பூண்டு வாங்க சந்தைக்குச் செல்வதற்கு முன், நீங்கள் சீனப் பூண்டை வாங்குகிறீர்களா அல்லது உள்ளூர் பூண்டை வாங்குகிறீர்களா என்பதை சரிபார்க்கவும் என கூறியுள்ளார்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment