Search

ஒரு மாதத்தில் எவ்வளவு உடல் எடையை குறைப்பது பாதுகாப்பானது..? வேகமாக குறைவதால் வரும் ஆபத்துகள் என்ன?

 உடல் எடையை குறைப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான முதல் படியாக இருக்கலாம். ஆனால் அதை பாதுகாப்பாக அணுகுவது முக்கியம் ஆகும். விரைவான எடை இழப்பு கவர்ச்சிகரமானதாகத் தோன்றினாலும், இது பெரும்பாலும் நன்மைகளை விட அதிக ஆபத்துகளையே தருகிறது.

நிலையான மற்றும் ஆரோக்கியமான பலன்களை அடைவதற்கு மாதாந்திர எடை இழப்புக்கான பாதுகாப்பு வரம்பை புரிந்துகொள்வது அவசியம். உங்கள் எடை குறைப்பு பயணத்திற்கு உதவும் வழிகாட்டி இதோ இந்தக் கட்டுரையில் உள்ளது.

மாதாந்திர எடை குறைப்புக்கான வரம்பு என்ன..?

எடை இழப்பு என்று வரும்போது, ​​​​மெதுவாகவும் நிலையானதாகவும் இருக்க வேண்டும். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) கூறியுள்ள படி, பாதுகாப்பான மற்றும் நிலையான எடை குறைப்பு இலக்கு வாரத்திற்கு 0.5 முதல் 1 கிலோகிராம் ஆகும். அப்படியென்றால் இது ஒரு மாதத்தில் மொத்தம் 2 முதல் 4 கிலோகிராம் வரை வருகிறது.

படிப்படியான அணுகுமுறை உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பதில் மட்டுமல்லாமல், காலப்போக்கில் எடை இழப்பை பராமரிக்கவும் உதவுகிறது.

மெதுவாக எடை இழப்பு ஏன் மிகவும் பயனுள்ளது?

விரைவான உடல் எடை இழப்பு விரைவான முடிவுகளை தரலாம். ஆனால் இது பெரும்பாலும் தசை இழப்பு, ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் மெதுவான வளர்சிதை மாற்றத்திற்கு வழிவகுக்கிறது.

மெதுவான எடை இழப்பு உங்கள் உடலில் மாற்றங்களைச் சரிசெய்ய அனுமதிக்கிறது. தசை அடர்த்தியைப் பாதுகாக்க உதவுகிறது மற்றும் இழந்த எடையின் பெரும்பகுதி தசை அல்லது தண்ணீரைக் காட்டிலும் கொழுப்பாக இருப்பதை இந்த செயல் உறுதிசெய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.

News18

கலோரிக் குறைபாட்டின் பங்கு

உடல் எடையை குறைக்க, நாம் கலோரிக் பற்றாக்குறையை உருவாக்க வேண்டும். அதாவது நமது உடல் தற்போதைய எடையை பராமரிக்க தேவையானதை விட குறைவான கலோரிகளை உட்கொள்ள வேண்டும். வாரத்திற்கு 0.5 முதல் 1 கிலோகிராம் வரை பரிந்துரைக்கப்பட்ட எடை இழப்பை அடைய உங்கள் தினசரி உட்கொள்ளலை 500 முதல் 1,000 கலோரிகள் வரை குறைப்பது ஒரு பொதுவான வழிகாட்டுதலாகும்.

இந்த பற்றாக்குறையானது பெண்களுக்கு ஒரு நாளைக்கு 1,200 கலோரிகளுக்கும் அல்லது ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 1,500 கலோரிகளுக்கும் கீழே நமது கலோரி உட்கொள்ளலைக் குறைக்காது என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம். ஏனெனில் மிகக் குறைந்த கலோரிகளை உட்கொள்வது ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியின் முக்கியத்துவம்

ஒரு வெற்றிகரமான எடை இழப்பு பயணம் என்பது கலோரிகளை குறைப்பது மட்டுமல்ல; அந்த கலோரிகள் சத்தான மூலங்களிலிருந்து பெருவதை உறுதி செய்வதும் ஆகும். பழங்கள், காய்கறிகள், லீன் புரோட்டீன் மற்றும் முழு தானியங்கள் போன்ற சமச்சீரான உணவை உட்கொள்வதால், எடை குறைக்கும் பயணத்தின் போது நமது உடலை ஆதரிக்க தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

150 நிமிட மிதமான ஏரோபிக் உடற்பயிற்சி அல்லது வாரத்திற்கு 75 நிமிட தீவிர உடற்பயிற்சி போன்ற வழக்கமான உடல் செயல்பாடுகளை செய்து வந்தால், எடை இழப்பு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை இன்னும் அதிகமாக மேம்படுத்தலாம்.

மிக விரைவாக எடையை குறைப்பதால் வரக்கூடிய அபாயங்கள்ஒரு மாதத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட கிலோவை இழக்கும் யோசனை கவர்ச்சியாக இருந்தாலும், இதன் அபாயங்களை தெரிந்துகொள்வது முக்கியம். விரைவான எடை இழப்பு பித்தப்பைக் கற்கள், நீரிழப்பு, எலக்ட்ரோலைட் சமநிலையின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். சில நேரங்களில் யோ-யோ டயட் முறை நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.




Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment