சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் சுகாதார மையத்தில் செவிலியர் மற்றும் ஆய்வக நுட்புனர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 21.08.2024
Staff Nurse
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : DGNM படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம் : தினசரி ரூ. 778
Lab Technician
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். DMLT படித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம் : தினசரி ரூ. 778
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Director, Health Centre, Anna University, Sardar Patel Road, Chennai - 600025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.08.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment