உங்கள் டயட்டில் அவசியம் சேர்க்க வேண்டிய வைட்டமின் ஏ நிறைந்த பழங்கள்.!! - Agri Info

Adding Green to your Life

August 9, 2024

உங்கள் டயட்டில் அவசியம் சேர்க்க வேண்டிய வைட்டமின் ஏ நிறைந்த பழங்கள்.!!

 நோய் தொற்றுகளுக்கு எதிராக போராட, காயங்களை குணப்படுத்துதல், நமது எலும்புகளை வலிமையாக்க மற்றும் ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துவது போன்ற பல்வேறு முக்கிய செயல்பாடுகளுக்கு நம் உடலில் போதுமான வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ்கள் இருப்பது அவசியம்.

உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் மைக்ரோநியூட்ரியன்ட்ஸ்கள் என்றும் வரும் போது வைட்டமின் ஏ-வை ஒரு சூப்பர் ஹீரோ என்று குறிப்பிடலாம். வைட்டமின் ஏ என்பது ஃபேட்-சொல்யூபிள் அதாவது கொழுப்பில் கரைய கூடிய வைட்டமின் ஆகும். இது நம் சருமம், கூந்தல் மற்றும் பார்வை திறனை பராமரிக்க உதவுகிறது. தவிர நம்முடைய இனப்பெருக்க அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இதை நம்முடைய உடலால் இயற்கையாக உற்பத்தி செய்ய முடியாது என்பதால் வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள் நம்முடைய டயட்டில் சேர்க்கப்பட வேண்டும். சில ஆய்வுகளின்படி, வைட்டமின் ஏ-வானது கேன்சர் மற்றும் ஆஸ்துமாவை தடுக்க உதவும்.

News18

எவ்வளவு தேவை.?

வைட்டமின் ஏ-ஆனது நம் கல்லீரலில் சேமிக்கப்பட்டு உடலின் தேவைக்கேற்ப வெளியிடப்படுகிறது. தேசிய சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி நாளொன்றுக்கு ஆண்களுக்கு 900 மைக்ரோகிராம் மற்றும் பெண்களுக்கு 700 மைக்ரோகிராம் அளவு வைட்டமின் ஏ தேவைப்படுகிறது.

வைட்டமின் ஏ-வின் வகைகள்:

  • ரெட்டினோல்: இந்த வகை வைட்டமின் ஏ மாட்டிறைச்சி, கோழி போன்ற விலங்கு உணவுகளில் காணப்படுகிறது. நம் உடல் நேரடியாக இந்த ப்ரீ-ஃபார்ம்ட் வைட்டமினை எடுத்து கொள்ள முடியும்.

  • பீட்டா கரோட்டின்: இது பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்து பெறப்படும் வைட்டமின் ஏ-வின் தாவர அடிப்படையிலான மூலமாகும். இந்த வகை வைட்டமின் ஏ முதலில் அதன் ஆக்ட்டிவ் ஃபார்மாக (ரெட்டினோலாக) மாற்றப்பட்டு பின்னர் உடலால் பயன்படுத்தப்படுகிறது.

வைட்டமின் ஏ வழங்கும் நன்மைகள்:

நம்முடைய உடல் வளர்ச்சிக்குத் தேவையான முக்கியமான வைட்டமின் இதுவாகும். வைட்டமின் ஏ கொடுக்கும் பல்வேறு நன்மைகளில் சில முக்கிய நன்மைகள் இங்கே…

  • பார்வை திறனை மேம்படுத்துகிறது

  • இரவு குருட்டுத்தன்மை எனப்படும் மாலைக்கண் நோய் அபாயத்தைக் குறைக்கிறது

  • எலும்புகள் மற்றும் பற்களை பலப்படுத்துகிறது

  • தசை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது

  • நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

  • கேன்சரை தடுக்கிறது

  • இனப்பெருக்க அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, கருவில் வளரும் குழந்தையின் நுரையீரல் ஆரோக்கியமாக உருவாக உதவுகிறது.

    வைட்டமின் ஏ குறைபாடு…

    பொதுவாக குழந்தை பருவத்தில் வைட்டமின் ஏ குறைபாடு ஏற்படுவது என்பது ஒரு குழந்தை தாயிடமிருந்து போதுமான தாய்பாலை பெறாதபோது ஏற்படுகிறது. அதே போல வயிற்றுப்போக்கு பிரச்சனை குழந்தைகளின் உடலில் இருக்கும் வைட்டமின் ஏ இழப்புக்கு வழிவகுக்கிறது. அதே நேரம் வைட்டமின் ஏ குறைபாடு நாள்பட்ட வயிற்றுப்போக்கு ஏற்பட வழிவகுக்கிறது. வைட்டமின் ஏ குறைபாடு குறிப்பாக குழந்தைகளிடையே பார்வை பிரச்சனை ஏற்பட காரணமாக இருக்கிறது.

    வைட்டமின் ஏ நிறைந்த பழங்களின் பட்டியல்…

    வைட்டமின் ஏ பழங்கள், காய்கறிகள், விலங்கு உணவுகள் மற்றும் பால் பொருட்களில் காணப்படுகிறது. உங்களின் தினசரி வைட்டமின் ஏ தேவையை பூர்த்தி செய்ய உங்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய வைட்டமின் ஏ நிறைந்த பழங்கள் இங்கே…

    • பப்பாளி: பப்பாளியில் வைட்டமின் ஏ ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளது. இது பார்வை மற்றும் சருமத்திற்கு சிறந்தது. இது கார்னியாவை பாதுகாப்பதோடு ரெட்டினா சிதைவை தடுக்கிறது, எனவே இது கண் ஆரோக்கியத்திற்கான வைட்டமின் ஏ நிறைந்த ஒரு சிறந்த பழமாக அமைகிறது. காலை உணவாகவோ அல்லது ஸ்மூத்தி அல்லது இனிப்பு வடிவிலோ பப்பாளியை சாப்பிடலாம்.

    • மாம்பழம்: வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் சிறந்த மூலமாக இருக்கிறது மாம்பழம். ஒரு நடுத்தர அளவிலான மாம்பழம் தேவையான வைட்டமின் ஏ-யில் கிட்டத்தட்ட 75% வழங்குகிறது. தவிர சில வகை கேன்சர் மற்றும் பிற பெரிய நோய்களின் அபாயத்தை மாம்பழங்கள் குறைக்கிறது.

    • முலாம்பழம்: கோடைகால பழமான இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து ஒரு ஸ்லைஸ் செய்யப்பட்ட முலாம்பழத்தை சாப்பிடுவது புத்துணர்ச்சி அளிக்கும்.

    • கிரேப் ஃப்ரூட்: ஆரஞ்சு பழத்தை போலவே இருக்கும் கிரேப் ஃப்ரூட்டில் வைட்டமின் சி உடன் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் இதய நோய்கள், கேன்சர் மற்றும் கண் தொடர்பான பிரச்சனைகள் போன்ற பல நாள்பட்ட நிலைகளை தடுக்க உதவுகிறது.

    • தர்பூசணி: வைட்டமின் ஏ நிறைந்த இயற்கையான பழம் தர்பூசணி ஆகும். இது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி, தோல் ஆரோக்கியம் மற்றும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் அற்புதமாக செயல்படுகிறது.

    • ஃபிரெஷ்ஷான ஆப்ரிகாட்ஸ்: இவை ஃபிரெஷ், ட்ரை மற்றும் கேன்ட் வடிவத்தில் கிடைக்கின்றன. இதில் ஃபிரெஷ்ஷான ஆப்ரிகாட்ஸ் பழங்களில் வைட்டமின் ஏ நிரம்பியுள்ளது. இது பார்வையை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்றும் வயது சார்ந்த கண் பிரச்சனை ஏற்படும் வாய்ப்புகளை குறைக்க உதவுகிறது.

    • டேன்ஜரின் (Tangerine): வைட்டமின் ஏ வயது தொடர்பான மாகுலர் சிதைவை தடுக்க உதவுகிறது அந்த வகையில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் நல்ல மூலமாக இவை இருக்கின்றன. கண்களை கண்புரையிலிருந்து பாதுகாக்கிறது. அரிக்கும் தோலழற்சி போன்ற பல தோல் நிலைகளுக்கு சிகிச்சையளிப்பதில் இந்த பழம் உதவுகிறது.

      • நெக்ட்ரைன்: பிரகாசமான இந்த சிவப்பு நிற பழங்களில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. கண்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிகல்ஸ்களில் இருந்து பாதுகாக்கிறது. இந்த பழம் கண் ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்கிறது. செல் வளர்ச்சியை அதிகரிக்க, வெள்ளை ரத்த அணுக்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின் ஏ தொற்றுகளை எதிர்த்து போராட, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

      • கொய்யா: கொய்யா பழங்களில் வைட்டமின் ஏ நிறைந்திருப்பதால் பார்வை திறனை நன்றாக மேம்படுத்தும். தவிர கண்புரை மற்றும் மாகுலர் சிதைவின் வளர்ச்சியை குறைக்கிறது. சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது மற்றும் சருமம் வயதாகும் செயல்முறையை மெதுவாக்குகிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment