2021 ஆம் ஆண்டில் டன்லோபிலோ சிங்கப்பூர் நடத்திய ஆய்வில், கடைசியாக உங்கள் பெட்ஷீட்டை எப்போது மாற்றினீர்கள்? என்ற கேள்விக்கு 10.2% பேர் 2 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே படுக்கை விரிப்பை மாற்றுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், பெரும்பாலானோர் அதாவது 44.9% பேர் குறைந்தபட்சம் 1 முதல் 2 வாரங்களுக்கு ஒருமுறை படுக்கை விரிப்பை மாற்றுவதாக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. YouGov-இன் மற்றொரு கருத்துக்கணிப்புப் படி, இங்கிலாந்தில் உள்ள 18 முதல் 24 வயதுடைய ஆண்களில் 37% பேர் 5 முதல் 6 வாரங்களுக்கு ஒருமுறை பெட்ஷீட்டை மாற்றுவதும் தெரியவந்துள்ளது. சரி, இதிலிருந்து பெட்ஷீட்டை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்? என்ற கேள்வியும் நமக்குள் எழுந்துள்ளது அல்லவா?!
ஹெல்த்லைன், ஆரோக்கியத்திற்கான வலைத்தளத்தின்படி, “நேஷனல் ஸ்லீப் ஃபவுண்டேஷனின் 2012 வாக்கெடுப்பின்படி, 91 சதவீத மக்கள் ஒவ்வொரு வாரமும் தங்கள் பெட்ஷீட்டை மாற்றுகிறார்கள். படுக்கையானது, உடலுடன் நேரடி தொடர்புடையதாக இருக்கிறது. பெட்ஷீட்கள் உடலின் வியர்வைகளை உறிஞ்சும் தன்மை கொண்டது. குழந்தைகள், பெரியவர்கள், முதியவர்கள் என அனைவருடனும் நேரடியாக தொடர்பு கொண்டவையாக இருக்கின்றன.
இவற்றை படுக்கைகள் உறிஞ்சும் போது அவற்றில் பலவிதமான பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும். இதனால் மீண்டும் மீண்டும் படுக்கையில் படுக்கும் போது அவை கடுமையான தீங்கு விளைவிக்கும்.
உங்கள் பெட்ஷீட்களை அடிக்கடி மாற்ற வேண்டியதற்கான காரணங்கள்:
ஸ்கின் கண்டிஷன்:
ஸ்கின் கண்டிஷன் அல்லது ஒவ்வாமை உள்ள நபர்கள் சுத்தமான மற்றும் அசௌகரியமான தூக்கத்தில் இருந்து விடுபட அடிக்கடி பெட்ஷீட்களை மாற்ற வேண்டும். தூசுள் சுவாச ஒவ்வாமைக்கு முதன்மை காரணம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீண்ட காலமாக துவைக்கப்படாத பெட்ஷீட்டுகளில் தூங்குவது ஆஸ்துமாவை ஏற்படுத்தலாம். சுவாச பிரச்சனைகளை அதிகரிக்க செய்யலாம்.
வியர்த்தல்:
உறக்கத்தின் போது உங்களுக்கு அதிகமாக வியர்த்தால், உங்கள் பெட்ஷீட்களை அடிக்கடி மாற்றுவது வசதியான மற்றும் ஆரோக்கியமான தூக்கத்தை பராமரிக்க உதவுகிறது.
நோய்:
நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தாலோ அல்லது தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, கிருமிகள் பரவுவதைத் தடுக்க அடிக்கடி உங்கள் பெட்ஷீட்களை மாற்றுவது நல்லது.
சுற்றுச்சூழல் காரணங்கள்:
வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த காலங்களில் படுக்கையறையில் பாக்டீரியா வளர்ச்சியை தூண்டும். எனவே பாக்டீரியா வளர்ச்சியை தடுக்க அடிக்கடி பெட்ஷீட்களை மாற்றுவது நல்லது.
செல்லப்பிராணிகள் :
உங்கள் செல்லப்பிராணிக்கு படுக்கையில் தூங்கும் பழக்கம் இருந்தால், உங்கள் பெட்ஷீட்டை அடிக்கடி மாற்றி சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment