ஆஃபீஸ் சேரில் உட்கார்ந்து முதுகு கூன் வலைந்து போச்சா..? உங்களுக்குதான் இந்த டிப்ஸ்..! - Agri Info

Adding Green to your Life

August 13, 2024

ஆஃபீஸ் சேரில் உட்கார்ந்து முதுகு கூன் வலைந்து போச்சா..? உங்களுக்குதான் இந்த டிப்ஸ்..!

 நாள் முழுவதும் நாற்காலியில் உட்கார்ந்து வேலைபார்க்கும் வாழ்க்கை முறையானது கூன் முதுகு பாதிப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. நாற்காலியில் அமரும்போது நன்கு நேராகச் சாய்ந்து உட்காரப் பழக வேண்டும். தலையைக் கீழே தொங்கப்போட்டு, முதுகைக் குறுக்கி உட்காருவது முதுகை பலவீனப்படுத்தும். நாற்காலிகளில் அமர்ந்து நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து சிறிது தூரம் நடப்பது நல்ல ஓய்வாக இருக்கும். வேலைகளுக்கு நடுவே சில நிமிடங்கள் ஓய்வாக நடப்பது, தண்ணீர் பருகுவது உடலையும் மனத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

ஒரு நாளைக்கு 15 மணி நேரத்துக்கு மேல் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களின் வாழ்நாள் குறைகிறது என்று ஓரு ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது. உங்கள் கூன் முதுகு பாதிப்பை குறைக்க சில பயிற்சிகள் பின்வருமாறு.

News18

சைல்ட் போஸ்:

  • உங்கள் மணிக்கட்டுகளை உங்கள் தோள்களின் கீழ் நேரடியாக வைக்கவும் மற்றும் உங்கள் முழங்கால்களை மடக்கி உங்கள் இடுப்புக்குக் கீழே வைக்கவும்.

  • மெதுவாக உங்கள் இடுப்பை உங்கள் குதிகாலில் படுமாறு வைத்தபடி, உங்கள் கைகளை உங்களுக்கு முன்னால் நீட்டவும்.

  • உங்கள் நெற்றியை தரையில் வைத்து, உங்கள் கைகளை நன்றாக நீட்டவும்.

  • இந்த நிலையில் 30 வினாடிகள் முதல் 1 நிமிடம் வரை இருக்கவும், ஆழமாக சுவாசிக்கவும்.

கேட் - கௌவ் போஸ்:

  • உங்கள் மணிக்கட்டுகளை உங்கள் தோள்களின் கீழ் நேரடியாக வைக்கவும் மற்றும் உங்கள் முழங்கால்களை மடக்கி உங்கள் இடுப்புக்குக் கீழே வைக்கவும்.

  • உங்கள் கைகளை தரையில் ஊன்றி மண்டியிடவும். உங்கள் முதுகை மெதுவாக வளைத்து, வயிற்றை தரையை நோக்கி இறக்கி, உங்கள் தலை மற்றும் கால் மேல நோக்கி பார்க்கவும்.

வால் புஷ்:

  • சுவருக்கு முன் நேராக நின்று உங்கள் கைகளை சுவரின் மேல் வைக்கவும். உங்கள் முதுகு சாய்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தவும்.

  • உங்கள் முழங்கைகள் 90 டிகிரிக்கு வளைந்து, “W” நிலையில் இருக்கும் வரை, உங்கள் கைகளை சுவரில் மேல் வைத்து அழுத்தவும். அப்போது உங்கள் தோள்பட்டை மற்றும் முதுகு அழுத்தம் கொடுப்பதை நீங்கள் உணரலாம்.

  • இதை 10 முதல் 15 முறை வரை செய்யவும்.

    கோப்ரா போஸ்:

    • முதலில் தரையில் முதுகு நேராக இருக்குமாறு குப்புற படுக்க வேண்டும்.

    • பிறகு உங்கள் மார்பு பகுதியை தரையில் இருந்து உயர்த்த உங்கள் கைகளில் அழுத்தம் கொடுக்கவும்.

    • உங்கள் முதுகு சற்று வளைந்தபடி உங்கள் கைக்களை நேராக வைத்து தலையை சற்று தூக்கவும்.

    • இந்த நிலையை 15 முதல் 30 விநாடிகள் வரை வைத்திருங்கள், ஆழமாக சுவாசிக்கவும்.

      டௌன்வர்ட் ஃபேஸிங் டாக்:

  • உங்கள் மணிக்கட்டுகளை நேரடியாக உங்கள் தோள்களுக்குக் கீழேயும், உங்கள் முழங்கால்களை உங்கள் இடுப்புக்குக் கீழேயும் வைக்கவும்.

  • உங்கள் கைகளில் அழுத்தி, உங்கள் இடுப்பை பின்புறமாக உயர்த்தி, உங்கள் கைகளையும் கால்களையும் நேராக்குவதன் மூலம் தலைகீழாக “V” வடிவத்தை உருவாக்கவும்.

  • இந்த நிலையை 30 வினாடிகள் முதல் 1 நிமிடம் வரை வைத்திருங்கள், ஆழமாக சுவாசிக்கவும்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment