உங்கள் கால்களில் தீவிரமான அல்லது தாங்க முடியாத வலியை நீங்கள் எப்போதாவது அனுபவித்திருக்கிறீர்களா? இல்லையென்றால் இந்த வலியை போக்குவதற்காக உங்கள் கால் மேல் உங்கள் குழந்தையை உட்காரவோ அல்லது நிற்கவோ வைத்துள்ளீர்களா?
இப்படிச் செய்வது சரியானதல்ல. பிரச்சினையின் மூல காரணத்தை அடையாளம் காண வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டி வல்லுநர்கள் சில வழிமுறைகளை கூறுகின்றனர். கால் வலி பல்வேறு காரணங்களால் ஏற்படலாம் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதன் மூல காரணத்தைப் அறிந்து கொள்வது மிகவும் அவசியம் என்று டாக்டர் அனுப் காத்ரி கூறுகிறார்.
“சில உடல்நலப் பிரச்சினைகள் அல்லது நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மூட்டுவலி போன்ற நோய்கள் கடுமையான வலிக்கு முக்கிய காரணமாக இருக்கலாம். குளுட்டியஸ் தசைகள் (நிலைத்தன்மை மற்றும் சமநிலையை வழங்க உதவும்), தொடை தசைகள் (முழங்கால்களை வளைக்க உதவும்), கெண்டைக்கால் தசைகள் (ஓடுதல் அல்லது நடைபயிற்சி போன்ற இயக்கங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது) மற்றும் தசைநார் தசைகள் (இடுப்பை உறுதிப்படுத்துதல்) போன்றவை பலவீனமடைவதாலும் அசௌகரியம் மற்றும் வலியையும் ஏற்படுத்தும்,” என்று டாக்டர் காத்ரி கூறுகிறார்.
ஆகவே, சாதாரண வலி என்று இதை அலட்சியம் செய்யாமல், தனிநபர்கள் தங்கள் உடலின் இயக்கம் மற்றும் நெகிழ்வுத்தன்மையை பராமரிக்க உடலை நீட்டி அசைக்கும் செயல்பாடுகளை தவறாமல் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். நின்று கொண்டே கெண்டைக்காலை உயர்த்துதல் (15*3 தடவை), நின்றுகொண்டே கால்களை பக்கவாட்டில் நீட்டுவது (10*3 தடவை) மற்றும் Bird Dog – இடது காலை முழங்காலிட்டு வலது கையை தரையில் ஊன்றி, இட்து கை மற்றும் வலது காலை நீட்டுதல் - (10*12 தடவை) போன்ற உடற்பயிற்சிகள் பயனுள்ளதாக இருக்கும்.
நின்று கொண்டு இடுப்பை வளைத்தல் (சுவருக்கு எதிராக நேராக நின்று உங்கள் கால்களை பக்கவாட்டில் மேலும் கீழும் நகர்த்தவும்), Bird Dog (தரையில் மண்டியிட்டு கால்களை நேராக நீட்டுகதல்) மற்றும் கெண்டைக்காலை உயர்த்துதல் (சுவருக்கு எதிராக நின்று உங்கள் கால்விரல்களை மேலும் கீழும் உயர்த்துதல்) போன்ற பயிற்சிகள் பலனளிப்பதோடு நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளை தரக்கூடும் என டாக்டர். காத்ரி கூறுகிறார்..
மேலும், “இந்தப் பயிற்சிகள் தசைகளை வலுப்படுத்த உதவுகின்றன. அதோடு மட்டுமின்றி தசைகளின் உள்ளே வலுவடையச் செய்து, எதிர்காலத்தில் வலி வரக்கூடிய வாய்ப்பையும் குறைக்கும்” என்றும் டாக்டர் காத்ரி கூறினார்.
நின்றபடி இடுப்பை வளைத்தல் பயிற்சி இடுப்பு தசைகளை வலுப்படுத்துவதோடு நடைபயிற்சி போது உங்கள் இடுப்பின் ஸ்திரத்தன்மையை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். இந்த பயிற்சிகள் அனைத்தையும் ஒரு உடற்பயிற்சி பயிற்சியாளரின் வழிகாட்டுதலின் கீழ் தான் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். “மேலும் சரியான உணவு மற்றும் நீர்ச்சத்து மிகவும் அவசியமாகும். போதுமான அளவு வைட்டமின் ஈ இல்லாமை மற்றும் நீரிழப்பு ஆகியவை கெண்டைக்கால் வலி மற்றும் தசைப்பிடிப்பை ஏற்படுத்தும்” என்று டாக்டர் காத்ரி கூறுகிறார்.
No comments:
Post a Comment