Search

காசு, பணம் தேவை இல்ல... Free-யா ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கலாம்!! தாட்கோ வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

 தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (TAHDCO) தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதில் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையில்  ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி படிக்க விரும்பும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தாட்கோ வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் மாணவர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை. மாணவர்களின் கல்வி கட்டணத்தை தாட்கோ செலுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

படிப்புகள்:  இதில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் craftsmanship course in food production and patisserie மற்றும் craftsmanship course in food and beverage service படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.  பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் B.Sc Hospitality and hotel administration மற்றும் diploma in food production படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள்: மாணவர்கள் தேர்வில் குறைந்த பட்சம் 45 சதவிகித மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.  மேற்கண்ட தகுதிகள் உடைய விருப்பமுள்ள மாணவர்கள் www.tadcho.in என்ற வலைத்தளத்தில் சென்று இதற்க்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வரும் 18 ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தாட்கோ தரப்பில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

0 Comments:

Post a Comment