Search

Hotel vs Motel | ஹோட்டலுக்கும் மோட்டலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?

 ஹோட்டல் மற்றும் மோட்டல் என்ற இரண்டையும் பற்றி நீங்கள் நிச்சியம் கேள்விப்பட்டிப்பீர்கள். இவை இரண்டும் பயணத்தின் போது உங்களுக்கு தங்கும் வசதியை வழங்குகிறது. ஆனால் அவற்றுக்கிடையேயான வித்தியாசம் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் விடுமுறைக்கு திட்டமிடும்போதோ அல்லது பயணத்திற்குத் தயாராகும்போதோ, சில கேள்விகள் உங்கள் மனதில் முதலில் தோன்றும். எப்படிப் பயணம் செய்யப் போகிறோம்; தங்கும் வசதிகள் எங்கே உள்ளது; எங்கு செல்ல வேண்டும் போன்ற கேள்விகள்தான் அவை… இந்தக் கேள்விகளுடன் இரவு தங்குவது பற்றி நீங்கள் நினைக்கும் போதெல்லாம், முதலில் நினைவுக்கு வருவது ஹோட்டல்கள்தான்.

நல்ல தங்குமிட ஏற்பாடு இருந்தால், உங்கள் பயணம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். ஹோட்டல்களைப் பற்றி நீங்கள் அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நெடுஞ்சாலையில் பயணிக்கும் போதெல்லாம் நீங்கள் பல இடங்களில் மோட்டல்களைக் காணலாம். ஆனால் ஹோட்டலுக்கும் மோட்டலுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? நாங்கள் சொல்றோம்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஹோட்டல் மற்றும் மோட்டல் இரண்டுமே மக்களுக்கு தங்கும் வசதிகளை வழங்குகின்றன. ஆனால் அவர்களின் பெயர்களில் எவ்வளவு நுட்பமான வித்தியாசத்தை நீங்கள் காண்பீர்களோ, அதே வித்தியாசத்தை அவர்களின் பணிகளிலும் நீங்கள் காண்பீர்கள். இரண்டுக்கும் உள்ள உண்மையான வித்தியாசம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

இருப்பிடம்: ஹோட்டல்கள் பொதுவாக நகரங்கள், சுற்றுலாத் தலங்கள் அல்லது வணிக மையங்களின் நடுவில் அமைந்துள்ளன. நீங்கள் ஒரு நகரத்திற்குச் செல்ல விரும்பினால், அங்கே தங்குவதற்கு ஹோட்டல்கள் இருக்கும்; ஆனால் மோட்டல்கள் இருக்காது. உண்மையில், நாம் தங்கியிருக்கும் போது வசதியான மற்றும் ஆடம்பர அனுபவத்தைப் பெறும் நோக்கில் ஹோட்டலின் வடிவமைப்பு மற்றும் கட்டிடக்கலை உருவாக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் மோட்டல்கள் நகரின் நடுவில் கட்டப்படாமல் பொதுவாக நெடுஞ்சாலைகள் அல்லது பிரதான சாலைகளின் ஓரங்களில் கட்டப்படுகின்றன. இது பயணம் செய்பவர்களுக்கு ஒரு நாள் இரவில் தங்குவதற்கு பயன்படுத்தப்பட்டது. மோட்டல் என்றால் மோட்டார் லாட்ஜ் என்று அர்த்தம். அதாவது, உங்கள் வாகனத்தையும் நிறுத்துவதற்கு சரியான வசதி கிடைக்கும் இடம்.

வசதி மற்றும் சேவை: நீங்கள் ஒரு ஹோட்டலில் பல வகையான சொகுசு வசதிகளைப் பெற்றாலும் ஒரு மோட்டல் உங்களுக்கு இரவைக் கழிப்பதற்கான அடிப்படை வசதிகளை மட்டுமே வழங்குகிறது. உணவகம், நீச்சல் குளம், ஸ்பா, ஜிம், வணிக மையம் அல்லது அறை சேவை போன்ற வசதிகள் ஹோட்டலில் கிடைக்கின்றன. மோட்டல்களில் அடிப்படையான அறைகள், இலவச பார்க்கிங் மற்றும் காலை உணவு வசதி போன்ற எளிய வசதிகள் உள்ளன.

தங்குவதற்கான நேரம்: பொதுவாக நாம் ஹோட்டலில் நீண்ட நேரம் தங்கலாம். நீங்கள் நகரத்திற்குச் செல்லும்போதோ அல்லது வணிகக் கூட்டத்திற்குச் செல்லும்போதோ, நீங்கள் ஒரு ஹோட்டலைத் தேர்வு செய்கிறீர்கள். அதேசமயம், மோட்டல்கள் பயனத்தின் இடையில் தங்குவதற்கானவை. மக்கள் தங்கள் பயணத்தின் போது ஓரிரு இரவுகள் இங்கு தங்கியிருப்பார்கள்.

பட்ஜெட்: ஹோட்டல் அறைகள் நிறைய ஆடம்பர வசதியை வழங்குகின்றன. எனவே அவற்றின் வாடகை பெரும்பாலும் அதிகமாக இருக்கும். மோட்டல் அறைகள் ஒப்பீட்டளவில் மலிவானவை. பட்ஜெட்டுக்கு ஏற்ற வசதியை வழங்குவதே இதன் நோக்கம்.





🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

0 Comments:

Post a Comment