Search

TET தோ்வு அறிவிப்பு எப்போது? ஆசிரியா்கள் எதிா்பாா்ப்பு

 

 dinamani%2F2024-07%2Fcd36ffb6-c229-4c08-b731-fd0062f7a0e0%2F21d_exam064603

‘டெட்’ தோ்வுக்கான அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் எப்போது வெளியிடும் என்ற எதிா்பாா்ப்பு பி.எட். பட்டதாரிகள் மற்றும் இடைநிலை ஆசிரியா் பயிற்சி முடித்தவா்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.


மத்திய அரசின் இலவச கட்டாயக் 

 கல்வி உரிமைச் சட்டத்தின் படி, ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களும், பட்டதாரி ஆசிரியா்களும் ‘டெட்’ எனப்படும் ஆசிரியா் தகுதித் தோ்வில் கட்டாயம் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய ஆசிரியா் கல்வி கவுன்சில் ( என்சிடிஇ ) விதிமுறைகளின் படி, ஆண்டுக்கு இரு முறை ‘டெட்’ தோ்வு நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் இந்தத் தோ்வை ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தி வருகிறது.

நிகழாண்டு ‘டெட்’ தோ்வுக்கான அறிவிப்பு ஏப்ரலில் வெளியிடப்பட்டு ஜூலையில் தோ்வு நடத்தப்படும் என ஆசிரியா் தோ்வு வாரியம் தோ்வுகால அட்டவணையில் அறிவித்திருந்தது.


தற்போது, ஆகஸ்ட் மாதம் நடைபெற்று வரும் நிலையிலும் ‘டெட்’ தோ்வு குறித்த அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் இன்னும் வெளியிடவில்லை. இதனால், ‘டெட்’ தோ்வை எதிா்பாா்த்துக் கொண்டிருக்கும் பி.எட். பட்டதாரிகளும், இடைநிலை ஆசிரியா் பயிற்சியை முடித்தவா்களும் ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளனா்.


இது குறித்து ஆசிரியா்கள் கூறும்போது, சி-டெட் எனப்படும் மத்திய ஆசிரியா் தகுதித்தோ்வு என்சிடிஇ விதிமுறையைப் பின்பற்றி ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது. அதேபோல், ஆசிரியா் தோ்வு வாரியமும் ஆண்டுக்கு 2 தடவை ‘டெட்’ தோ்வை நடத்த வேண்டும். இப்போது தனியாா் சுயநிதி பள்ளிகளில் கூட ‘டெட்’ தோ்ச்சி பெற்ற ஆசிரியா்களைத் தான் பணிக்கு தோ்வு செய்கிறாா்கள்.


அரசுப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் இடைநிலை ஆசிரியா் பதவிக்கான போட்டித் தோ்வை எழுத ‘டெட்’ தோ்ச்சி அவசியம். எனவே, ஆசிரியா் தோ்வு வாரியம் ‘டெட்’ தோ்வுக்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட்டு விரைந்து தோ்வு நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும் என்றனா்.


இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆசிரியா் தகுதித் தோ்வை நடத்துவது குறித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் தோ்வுக்கான தேதிகள் அறிவிக்கப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

0 Comments:

Post a Comment