Search

10 நாட்கள் ஆசிரியர்களுக்கான கல்விசார் பயிற்சி நாட்களாக இருக்கும் - திருத்தப்பட்ட நாட்காட்டியில் அறிவிப்பு

 மாணவர்களுக்கான பள்ளி வேலை நாள் 210 ஆகவும், ஆசிரியர்களுக்கு வேலை நாள் 220 ஆகவும் புதிய நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 15.04.2025 உடன் முழு ஆண்டுத் தேர்வு முடிவடைந்து மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்கள் 16.04.2025 முதல் 30.04.2025  (10 வேலை நாட்கள்) வரை பள்ளிக்கு வந்து தேர்வு முடிவுகளை இறுதி செய்யவும், 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான முன் திட்டமிடல் உள்ளிட்ட நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவு!


தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கடந்த மே மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதையடுத்து நடப்பு கல்வியாண்டில் 2024-25ம் கல்வியாண்டில் புதிதாக என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று பள்ளி நாட்காட்டி ஒன்றை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.



அதில் பொதுவாக ஒவ்வொரு கல்வியாண்டும் 210 சராசரி வேலைநாட்களை கொண்டிருக்கும் நிலையில், நடப்பு கல்வியாண்டில் 220 நாட்களை வேலைநாட்களாக கொண்டு நாட்காட்டி வெளியிடப்பட்டது. இதையடுத்து வேலை நாட்களை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது.


இந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 10 வேலை நாட்களை குறைத்து, 210 வேலைநாட்கள் இருக்கும் வகையில் திருத்தப்பட்ட நாட்காட்டி பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. 


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

0 Comments:

Post a Comment