படுக்கைக்கு செல்வதற்கு 10 நிமிடத்திற்கு முன்பாக இந்த எளிய உடற்பயிற்சியை செய்வதால் நல்ல தூக்கம் கிடைப்பதை பற்றிய விரிவான தகவலை இங்கே பார்க்கலாம்.
ஓடோரினோலரிஞ்ஜாலஜி மற்றும் தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை ஆலோசகரும், டாக்டருமான ஷீத்தல் ராடியா, போதுமான அளவு இடையூறு இல்லாத தூக்கத்தைப் பெற, தூக்கமின்மைக்கான மூல காரணத்தை புரிந்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
மனித உடலுக்கு தேவையான ஓர் அற்புத சக்தி தூக்கம். யார் ஒருவருக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்கிறதோ, அவர்களே தங்களது அன்றாட வேலைகளை நிம்மதியாகவும், சோர்வில்லாமலும் தொடர முடியும். இத்தகைய தூக்கம் கிடைக்காமல் பலரும் இரவில் போராடி வருகின்றனர்./
இரவு தூக்கத்திற்கு ஒவ்வொரு மக்கள் ஒவ்வொரு நுட்பங்களை முயற்சி செய்கிறார்கள். ஒரு சிலர் ஒயிட் நாய்ஸ் கேட்டு உறங்க முயற்சிக்கிறார்கள், வேறு சிலர் வெதுவெதுப்பான தண்ணீரில் குளியல் அல்லது தியானம் செய்துவிட்டு உறங்க செல்கிறார்கள். ஆனால், தூங்க செல்வதற்கு முன்பாக நமது கைகளை சிறிது அசைத்து ஆட்டுவதன் மூலம் தூக்கத்தை வர வைக்கலாம் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத ஒன்றுதான்.
உரிமம் பெற்ற மசாஜ் சிகிச்சையாளரான ஜேம்ஸ் மூரின் கூற்றுப்படி, ஆர்ம் ஸ்விங்ஸ் - படுக்கைக்கு செல்வதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக கைகளை ஆட்டி அசைத்துவிட்டு தூங்கும் போது நல்ல நன்றாக உறக்கம் வரும். உடல் ஓய்வுக்கு இந்த ஆர்ம் ஸ்விங்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது என்று மூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தப் பயிற்சியைச் செய்ய, ஒருவர் நேராக நின்று, உடலைத் தளர்த்தி, வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக கைகளை மெதுவாக அசைக்க வேண்டும். இந்த உடற்பயிற்சி பாராசிம்பேடிக் நரம்பு மண்டலத்தை தூண்டுவதற்கு உதவுகிறது என்று மூர் குறிப்பிட்டுள்ளார், இது ஒருவருக்கு நிம்மதியான தூக்கத்தை தருகிறது.
இதுபற்றி குருகிராமில் உள்ள நாராயண மருத்துவமனையின் நுரையீரல் மற்றும் தூக்க மருத்துவத்தின் மூத்த ஆலோசகர் டாக்டர் ஸ்வேதா பன்சால் கூறுகையில், கை ஸ்விங் பயிற்சிகள் சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கும். “இதுபோன்ற இயக்கங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகின்றன, மன அழுத்தத்தைக் குறைக்கின்றன மற்றும் ஓய்வை வழங்கி, ஒரு நல்ல இரவு தூக்கத்திற்கு வழிசெய்கிறது” என்று டாக்டர் பன்சால் கூறினார்.டாக்டர் பன்சலின் கூற்றுப்படி, படுக்கைக்கு முன் கைகளை மெதுவாக அசைப்பது மூச்சை நிதானமாக்கி, தசை பதற்றத்தைப் போக்கவும், மனதை அமைதிப்படுத்தவும் தேவையான தாக்கத்தை ஏற்படுத்தும். கூடுதலாக, தொடர்ச்சியான இயக்கம் ஒரு தியான செய்வது போன்ற நிலையை ஏற்படுத்தி தூக்கத்தை ஊக்குவிக்கிறது. தூக்கத்திற்கு முன்பாக கை ஸ்விங் பயிற்சிகளை மேற்கொள்வது ஒட்டுமொத்த தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதோடு தூங்குவதை எளிதாக்கும் என்றும் டாக்டர் பன்சால் கூறினார்.
எவ்வாறாயினும், மீரா ரோட்டின் வொக்கார்ட் மருத்துவமனையின் ஓடோரினோலரிஞ்ஜாலஜி மற்றும் தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை ஆலோசகர் டாக்டர் ஷீத்தல் ராடியா, “சிலருக்கு அவர்களின் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மற்றும் உடலின் இணக்கத்தைப் பொறுத்து இந்த நுட்பம் வேலை செய்யலாம் அல்லது வேலை செய்யாமலும் போகலாம்” என்று கூறினார்.
நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதை நிரூபிக்க போதுமான அறிவியல் சான்றுகள் அல்லது ஆராய்ச்சிகள் ஏதும் இல்லை, போதுமான மணிநேரம் தடையின்றி தூங்குவதற்கு தூக்கமின்மைக்கான மூல காரணத்தை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் ராடியா கூறினார்.
தூக்கத்திற்கு முன் காஃபின் கலந்த பானங்களை குடிப்பது, தூக்கத்தை ஊக்குவிக்கும் மருந்துகளை தடுப்பது, அசாதாரண நேரங்களில் தூங்குவது, கடுமையான மன அழுத்தம் அல்லது மனநலப் பிரச்சனைகள், தூக்கக் கோளாறுகள் மற்றும் சில மருந்துகள் என தூக்கமின்மைக்கு பல்வேறு காரணிகள் இருக்கலாம். இவற்றை முதலில் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் டாக்டர் ராடியா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment