2024-25ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாட்காட்டி (குறைக்கப்பட்ட வேலை நாட்கள்) வெளியீடு சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!! - Agri Info

Adding Green to your Life

September 9, 2024

2024-25ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாட்காட்டி (குறைக்கப்பட்ட வேலை நாட்கள்) வெளியீடு சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!

 IMG_20240909_202034


2024-25 ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி பார்வை ( 2 ) ல் கண்டுள்ள கடிதப்படி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டு நாட்காட்டி குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் அனுப்பி வைக்க தெரிவிக்கப்பட்டது . இப்பொருள் சார்ந்து பெறப்பட்ட கருத்துக்கள் நடைமுறையில் உள்ள அரசாணைகள் பார்வை ( 2 ) ல் கண்டுள்ள சட்டம் மற்றும் தொடர்புடைய விதிகள் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டது.


 பார்வை ( 3 ) ல் கண்டுள்ள சட்டத்தின்படி 6 முதல் 8 வகுப்புகளுக்கு குறைந்தபட்சம் 220 வேலை நாட்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை மற்றும் 2024-25 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் ஜூன் 10 ம் தேதி திறக்கப்பட்டமை ஆகியனவற்றை கருத்திற்கொண்டு 6 முதல் 8 வகுப்புகளுக்கு வரையறுக்கப்பட்டுள்ள வேலை நாட்களின் அடிப்படையில் உயர் மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கும் 220 வேலை நாட்கள் ( 210 நாட்கள் கற்றல் - கற்பித்தல் , தேர்வுகள் உள்ளிட்டவைக்கும் 10 நாட்கள் பயிற்சி உள்ளிட்ட கல்விசார் பணிகளுக்கும் ) என நிர்ணயம் செய்து 2024-25 ஆம் கல்வியாண்டில் பின்பற்றப்பட வேண்டிய திருத்திய நாட்காட்டி இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது . இதனை சார்நிலை அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

`புதிய நாட்காட்டி விரைவில்....

 DSE - New Academic Calendar - Proceedings👇👇👇

Download here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

No comments:

Post a Comment