தமிழகத்தில், திருச்சியில் அமைந்துள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR NRCB) டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 11 அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.10.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Graduate Apprentices
காலியிடங்களின் எண்ணிக்கை: 5
Chemistry – 2
Biotechnology – 2
Computer Science - 1
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் B.Sc படிப்பு படித்திருக்க வேண்டும். 2020,
2021, 2022, 2023, 2024 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊக்கத்தொகை: ரூ. 9,000
Diploma
(Technician) Apprentices
காலியிடங்களின் எண்ணிக்கை: 6
Computer Science – 1
Agriculture/ Horticulture - 5
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ படிப்பு படித்திருக்க வேண்டும். 2020,
2021, 2022, 2023, 2024 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊக்கத்தொகை: ரூ. 8,000
வயது தகுதி: 18
வயது முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகள் படி வரம்பில் குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க
https://www.mhrdnats.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
07.10.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://nrcb.icar.gov.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்வையிடவும்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment