பிரசவத்திற்கு பின் மூளை இப்படியெல்லாம் மாறுமா..? ஆய்வில் தெரிய வந்த உண்மை..! - Agri Info

Adding Green to your Life

September 24, 2024

பிரசவத்திற்கு பின் மூளை இப்படியெல்லாம் மாறுமா..? ஆய்வில் தெரிய வந்த உண்மை..!

 கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் உடல் பல மாற்றங்களுக்கு உள்ளாகிறது. இது முக்கியமாக ஹார்மோன், இதயம், சுவாசம், செரிமானம், சிறுநீர் மற்றும் பல மாற்றங்களை உள்ளடக்கியது. ஆனால் கர்ப்ப காலத்தில் அல்லது அதற்குப் பிறகு ஒரு பெண்ணின் மூளையில் சரியாக என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது பற்றி புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கர்ப்பத்தில் மூளையில் ஏற்படும் விளைவுகள்:

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் நரம்பியல் விஞ்ஞானிகளால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கர்ப்ப காலத்தில், ஒரு பெண்ணின் உடலைப் போலவே மூளையும் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உள்ளாகிறது என்று புதிய ஆராய்ச்சி காட்டுகிறது. ஆய்வில், கருத்தரிப்பதற்கு முன்பிருந்து கர்ப்பமாகி 9 மாதங்கள் வரை மற்றும் கரு பிறந்து இரண்டு ஆண்டுகள் வரை அந்தந்த பெண்களின் மூளை ஸ்கேன் செய்யப்பட்டது. அவற்றில் சில தற்காலிகமானவை, மற்றவை நீண்ட காலம் நீடிக்கும். கர்ப்பம் முழுவதும் மனித மூளை இவ்வளவு விரிவாக வரைபடமாக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். கர்ப்பகால ஹார்மோன்களான, எஸ்ட்ராடியோல் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஆகியவற்றின் அளவு அதிகரிப்பதால் இந்த மாற்றங்கள் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மூளையின் 40% கிரே மேட்டர். எனவே 60% வைட் மேட்டர். இவை இரண்டும் மூளை மற்றும் ஸ்பைனல் கார்டின் முக்கிய பாகங்கள் ஆகும்.

News18

கிரே மேட்டரால் ஏற்படும் மாற்றங்கள் மனிதனை எவ்வாறு பாதிக்கின்றன?
இந்த மாற்றங்கள் குழந்தைகள் பருவமடையும் போது ஏற்படும் மாற்றங்களைப் போலவே இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கர்ப்பம் இதேபோன்ற மாற்றங்களை தூண்டுகிறது. இது தாய்மையின் கோரிக்கைகளுக்கு ஏற்ப மூளையை மாற்றியமைக்கிறது. கர்ப்ப காலத்தில் மூளையில் உள்ள கிரே மேட்டர் சுமார் 4 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் பிரசவத்திற்குப் பிறகு, இந்த குறைவு அதிகரிக்கப்படும். தாய்மார்கள் தங்கள் புதிதாகப் பிறந்த குழந்தைகளுடன் வலுவான உணர்ச்சிப் பிணைப்பை உருவாக்குவதற்கும், அவர்களின் குழந்தையின் தேவைகளுக்கு இணங்குவதற்கும் இந்த மாற்றம் அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

வைட் மேட்டரால் ஏற்படும் மாற்றங்கள்:

மூளையில் உள்ள வைட் மேட்டர் என்பது நரம்பு மண்டலத்திலிருந்து செய்திகளை அனுப்புவது, எடுத்துச் செல்வது மற்றும் செயலாக்குவது. வைட் மேட்டரின் செயல்பாடானது, மூளையின் பல்வேறு பகுதிகளுக்கு இடையேயான தகவல்தொடர்பு, மூளையில் உள்ள கிரே மேட்டர் மற்றும் உங்கள் உடலின் மற்ற பகுதிகளுக்கு இடையேயான தொடர்பை ஏற்படுத்துவதாகும். டாக்டர். க்ராஸ்டிலின் கர்ப்பத்தின் முதல் 6 மாதங்களில், அவரது மூளையின் வெவ்வேறு பகுதிகளில் வைட் மேட்டர் அதிகமாக இருந்தது. குழந்தை பிறந்த உடனேயே மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பியது.

“மம்மி பிரைன்” என்றால் என்ன?

மம்மி பிரைன் என்பது பல தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் மற்றும் பிரசவத்திற்குப் பிறகு அனுபவிக்கும் மாற்றங்கள் மற்றும் நினைவாற்றல் குறைபாடுகளை குறிக்கிறது. கர்ப்பம் மற்றும் பிரசவத்தின்போது ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகள் பெரும்பாலும் ஒழுங்கற்ற தூக்க முறைகளைக் கொண்டுள்ளதால் அவர்களைப் பராமரிக்கும் தேவைகள் ஆகியவற்றுடன் உடல் மற்றும் உணர்ச்சி மாற்றங்களின் கலவையால் அம்மா மூளை பெரும்பாலும் பாதிக்கப்படுகிறது. ஆய்வின் போது நான் வித்தியாசமாக உணரவில்லை என்று ஆய்வில் பங்கேற்ற க்ராஸ்டில் என்ற பெண் குறிப்பிட்டுள்ளார்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment