இதுவரை குழந்தைகளுக்குக் கதை சொல்லியிருக்கிறோம். இப்போது அவர்களே கதைகளை வாசிக்க இருக்கிறார்கள். கேட்போராக (Listeners) இருக்கும் குழந்தைகளை வாசிப்போராக (Readers) மாற்றும் முயற்சி இது.அரசுப் பள்ளிகளில் படிக்கும் எளிய வீட்டுப் பிள்ளைகளின் கைகளில் சின்னச் சின்ன கதைப் புத்தகம் தரும் புதிய முயற்சி, முன்னேறிய நாடுகளில் 70 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது குழந்தைகளின் சுய வாசிப்பு (Independent Reading). இந்தியாவில் முதன்முதலாகத் தமிழ்நாட்டில் 250 புத்தகங்களுடன் குழந்தைகளின் சுயவாசிப்பு இயக்கம் தோன்றுகிறது.
2024-2025 ஆண்டில் அரசு தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வாசிப்பு இயக்கத்தை செயல்படுத்திட 4 முதல் 9 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு TNTP தரும் பயிற்சியில் பங்கேற்க வைத்தல்
வாசிப்பு இயக்கப் புத்தகங்கள் அரசுப்பள்ளிகளுக்கு சென்று சேர்ந்ததை உறுதி செய்தல் வேண்டும்.
கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 53 புத்தகங்கள் தற்போது வழங்கியுள்ள 71 புத்தகங்கள் EMIS தளத்தில் பதிவேற்றுதல்
வாசிப்பு இயக்கப் புத்தகங்களை பயன்படுத்துதல் நூலக பாடவேளையில் உரிய வழிக்காட்டுதல்களை வழங்குதல்
மாணவர்கள் எந்த வாசிப்பு நிலையில் உள்ளனர் ( நட , ஓடு , பற ) என்ற விவரத்தை EMIS தளத்தில் உள்ளீடு செய்தல் உள்ளிட்ட வழிகாட்டும் நெறிமுறைகளை மாநில திட்ட இயக்ககம் , ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ளது.
Click Here to Download - வாசிப்பு இயக்கம் நடைமுறை படுத்துதல் - ஆசிரியர் வழிகாட்டி கையேடு - Pdf
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment