வெங்காயம் மற்றும் தயிர் இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் இத்தனை பிரச்சனைகள் வருமா..? - Agri Info

Education News, Employment News in tamil

September 15, 2024

வெங்காயம் மற்றும் தயிர் இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் இத்தனை பிரச்சனைகள் வருமா..?

 தயிர் மற்றும் வெங்காயம் இந்திய உணவுகளில் பிரபலமான தேர்வாக உள்ளது. தயிர்-வெங்காயம் இரண்டையும் ஒன்றாக கலந்து தயார் செய்யப்படும் , தயிர் பச்சடி, ரைதா அல்லது ‘தாஹி-பப்டி சாட்’ என அழைக்கப்படுகிறது. குறிப்பாக தயிர் பச்சடி இல்லாமல் பலர் பிரியாணி சாப்பிடுவதையே விரும்ப மாட்டார்கள். அந்தளவுக்கு தயிர் பச்சடி பிடிக்கும் நபர்களும் இருக்கிறார்கள். ஆனால் ஆயுர்வேதத்தின் படி தயிர் குளிர்ச்சியானதாகவும், வெங்காயம் உடலில் வெப்பத்தை உண்டாக்க கூடியதாகவும் கருதப்படுகிறது.

இந்த கலவையானது பசியைத் தூண்டும் அதே வேளையில், இது உங்கள் ஆரோக்கியத்திற்கு உண்மையிலேயே பயனுள்ளதா? அல்லது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்குமா? என்பது குறித்து நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

News18

தயிர் மற்றும் வெங்காயம் இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதால் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பது குறித்து இங்கு காண்போம்.,

  • செரிமான தாக்கம்: தயிரில் லாக்டோஸ் மற்றும் பிற சேர்மங்களை உடைக்க உதவும் புரோபயாடிக்குகள் உள்ளன, அதேசமயம் வெங்காயத்தில் நார்ச்சத்து மற்றும் சல்பர் கலவைகள் உள்ளன. இவை செரிமானத்தை சீர்குலைக்கும். இதனால் தயிர் மற்றும் வெங்காயத்தை ஒன்றாக சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

  • வாயு மற்றும் அமிலத்தன்மை: வெங்காயத்தில் வயிற்றில் வாயு மற்றும் அமிலத்தன்மையை அதிகரிக்கும் கலவைகள் உள்ளன. மேலும் வெங்காயம் அமிலத்தன்மை கொண்ட தயிருடன் இணைந்தால், இது வீக்கத்தின் அறிகுறிகளை அதிகரிக்கலாம் மற்றும் சிலருக்கு அஜீரணம் அல்லது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

  • சுவை : வெங்காயத்தின் காரமான சுவை தயிரின் மென்மையான சுவையை முறியடிக்கும், இது உணவின் ஒட்டுமொத்த சுவையை பாதிக்கிறது.

  • ஊட்டச்சத்து உறிஞ்சுதல்: வெங்காயம் மற்றும் தயிரை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது சில ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதலில் பிரச்சனையை ஏற்படுத்தலாம். வெங்காயத்தில் கந்தகம் உள்ளது, இது தயிரில் இருந்து கால்சியம் உறிஞ்சப்படுவதைத் தடுக்கும். இதனால் இரண்டையும் சேர்த்து சாப்பிடும் போது கவனம் தேவை.

ஆயுர்வேதத்தின் படி, வெங்காயம் மற்றும் தயிர் சேர்த்து சாப்பிடுவது சில நபர்களுக்கு உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இருப்பினும், இந்த கலவையை உட்கொள்வதால் எந்த எதிர்மறையான விளைவுகளையும் நீங்கள் அனுபவிக்கவில்லை என்றால், அதை தொடர்ந்து உட்கொள்வது பாதுகாப்பானது.

வெங்காயம் மற்றும் தயிர் இரண்டும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. வெங்காயத்தில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருந்துள்ளது, அதேபோல தயிர் புரதம், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் புரோபயாடிக்குகளை வழங்குகிறது. இருப்பினும், அவற்றை இணைப்பது சிலருக்கு செரிமான அசௌகரியம் மற்றும் அமிலத்தன்மைக்கு வழிவகுக்கும். எனவே அளவாக சாப்பிடலாம். இதனை அவ்வப்போது சாப்பிடுவதால் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment