பனீர் என்பது பாலில் இருந்து தயார் செய்யப்படும் ஒரு உணவு பொருளாகும். பனீர் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாகும். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. ஆனால் தற்போது போலி பனீர் விற்பனைக்கு வந்துள்ளதால் இது பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
போலி பனீர் இந்தியாவில் விற்கப்படுவதை சமீபத்திய ஆய்வுகள் அடையாளம் கண்டுள்ளன. அதிர்ஷ்டவசமாக, போலி வகைகளில் இருந்து உண்மையான பனீரை வேறுபடுத்த எளிய மற்றும் பயனுள்ள முறைகள் உள்ளன. இதுகுறித்து மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் ஷைல்ஜா ஷர்மைன் கூறிய வழிகாட்டுதல்கள் குறித்து இங்கு காண்போம்.,
வீட்டில் போலியான ‘பனீர்’ சோதனை செய்வது எப்படி?
அயோடின் சோதனை : முதலில் நீங்கள் வாங்கி வைத்துள்ள பனீரை வேக வைத்து எடுத்து கொள்ளவும். இதனுடன் சிறிதளவு அயோடினை சேர்க்க வேண்டும். இப்போது பனீர் நீலமாக மாறினால், அது செயற்கையாக இருக்கலாம். உண்மையான பனீர் அதன் அசல் நிறத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். எனவே நிறம் மாறாமல் வெள்ளையாகவே இருந்தால் அது இயற்கையான முறையில் சுத்தமாக தயார் செய்யப்பட்டதாகும்.
தால் டெஸ்ட் : தால் டெஸ்ட் என்பது பருப்பை கொண்டு செய்யப்படும் சோதனை ஆகும். இதற்கு வேகவைத்த பனீரை எடுத்து தண்ணீர் ஊற்றி குளிர்விக்க வேண்டும். இதனுடன் துவரம் பருப்பை சேர்த்து கொள்ளுங்கள். சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு, தண்ணீர் வெளிர் சிவப்பு நிறமாக மாறினால், அது போலியானது. எந்த நிற மாற்றமும் இல்லையென்றால் பனீர் தூய்மையானது என்று அர்த்தம்.
மென்மையை கண்டறியுங்கள் : உண்மையான பனீரை தொட்டு பார்த்தல் மென்மையாக இருக்கும். செயற்கை முறையில் தயாரித்த பனீர் என்றால் அது ரப்பர் போன்று காணப்படும். இதன் மூலம் நாம் போலியானதை உடனடியாக கண்டறியலாம். மேலும் இயற்கையான முறையில் தயார் செய்யப்பட்ட பனீர் உதிர்த்தால் உதிரிஉதிரியாக இருக்கும்.
வாசனை சோதனை : உண்மையான பனீரில் லேசான பால் வாசனை இருக்கும், அதே சமயம் போலி பனீரில் ரசாயன வாசனை இருக்கலாம்.
சுவை சோதனை : உண்மையான பனீர் ஒரு சுத்தமான பால் போன்ற சுவையை வழங்குகிறது, செயற்கை முறையில் தாயார் செய்யப்பட்ட பனீர் பால் சுவை இன்றி காணப்படும். மேலும் சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டிருந்தாலும் எளிதாக கண்டறிய முடியும்.
ஈரப்பதம் சோதனை : உண்மையான பனீர் அழுத்தும் போது லேசான ஈரப்பதத்துடன் இருக்கும். இது பெரும்பாலும் போலி தயாரிப்புகளில் இருக்காது.
சமையல் சோதனை : உண்மையான பனீர் சமைக்கும் போது பழுப்பு நிறமாகி அதன் வடிவத்தை பராமரிக்கிறது, அதே நேரத்தில் போலி பனீர் ரப்பர் போல மாறிவிடும்.
போலி பனீர் சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் :
செயற்கை பனீர் மிகவும் ஆபத்தானது. இதனை அடிக்கடி சாப்பிடுவதால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் குமட்டல் போன்ற உடனடி அறிகுறிகளை ஏற்படுத்தும். போலி பனீரில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இருப்பதால் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கலாம்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment