இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் மேற்கொள்வதன் மூலம் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவும், ஆற்றலை அதிகரிக்கவும், ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவுகிறது. இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் என்பது ஒரு உணவுத் திட்டம் ஆகும். இந்த செயல்முறையானது உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது உடலில் உள்ள கொழுப்பை குறைகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் மேற்கொள்ள 8 வழிகளை பற்றி பார்ப்போம்..
16:8 டயட்: 16/8 செயல்முறையானது 8 மணி நேரம் சாப்பிட வேண்டும் மற்றும் 16 மணி நேரம் சாப்பிடக்கூடாது. அதாவது, நீங்கள் மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை சாப்பிடலாம். இதனையடுத்து அடுத்த நாள் மதியம் 12 மணிக்கு உங்களின் அடுத்த உணவை சாப்பிட வேண்டும். இந்த இடைப்பட்ட 16 மணிநேர காலம் தான் உங்களுடைய உண்ணாவிரத நேரம் ஆகும். இந்த அணுகுமுறை எளிமையானது. மேலும் இது, கொழுப்பை குறைக்கிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
5:2 டயட்: 5:2 உணவில், நீங்கள் வாரத்தில் ஐந்து நாட்களுக்கு சாதாரணமாக சாப்பிடுவீர்கள், மற்ற இரண்டு நாட்களில் கலோரிகளில் நான்கில் ஒரு பாகமாக கட்டுப்படுத்துவது ஆகும். அதாவது சுமார் 500 முதல் 600 கலோரிகளாக வாரத்தில் இரண்டு நாட்களுக்கு எடுத்துகொள்வதை குறிக்கிறது. தினசரி உண்ணாவிரதத்தை விட இந்த முறையை பின்பற்றுவது எளிதாக இருக்கும்.
ஈட் - ஸ்டாப் - ஈட் டயட்: இந்த ஈட் ஸ்டாப் ஈட் டயட்டில் வாரத்திற்கு இரண்டு முறை 24 மணி நேரம் உண்ணாவிரதம் இருப்பதாகும், மீதமுள்ள நாட்களில் நன்றாக சாப்பிடலாம். இந்த முறையானது கொழுப்பை குறைகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
ஆல்டர்னேட் ஃபாஸ்டிங்: ஆல்டர்னேட் ஃபாஸ்டிங் என்பது டயட் இருக்கும் நாளில் 500 கலோரிகள் மட்டும் எடுக்க வேண்டும். இந்த முறையானது எடை குறைப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
வாரியர் டயட்: இதில் 20 மணிநேரம் உண்ணாவிரதம் இருப்பது மற்றும் 4 மணி நேரம் சாப்பிடுவதுமாகும். 4 மணி நேரத்தில் நீங்கள் விரும்பும் எதையும் சாப்பிடலாம். இந்த முறையானது கொழுப்பை குறைக்கிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு: ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு என்பது சாப்பிடும் நேரத்தை தவிர, மீதமுள்ள 23 மணி நேர உண்ணாவிரதம் இருப்பதும் ஆகும். இந்த முறையானது உணவு முறைகளை எளிதாக்குகிறது மற்றும் எடை குறைப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
டைம் ரெஸ்ட்ரிக்டட் ஈட்டிங்: டைம் ரெஸ்ட்ரிக்டட் ஈட்டிங் என்பது, குறிப்பிட்ட நேரத்திற்கு உணவை கட்டுப்படுத்தும் உணவு முறை ஆகும். அதாவது, ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு எடுத்து கொள்வதை கட்டுப்படுத்துகிறது. இந்த முறையானது எடை குறைப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இந்த முறையின் எளிமை பலருக்கு விருப்பமான தேர்வாக அமைகிறது.
500 கலோரிகளுடன் ஆல்டர்னேட் ஃபாஸ்டிங்: 500 கலோரிகளுடன் ஆல்டர்னேட் ஃபாஸ்டிங் என்பது, முதல் நாள் சாதாரணமாக சாப்பிட்டு, அடுத்த நாள் சுமார் 500 கலோரிகளை மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும்.. இந்த முறையானது எடை குறைப்பு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கை யார் தவிர்க்க வேண்டும்? கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள், நாள்பட்ட உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் மற்றும் குறிப்பிட்ட மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் ஆகியோர் இந்த இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் முறையைத் தொடங்குவதற்கு முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
**இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கில் சிறந்தது எது?**இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கில் சிறந்த முறை என்பது பெரும்பாலும் தனிப்பட்ட விருப்பம் மற்றும் வாழ்க்கை முறையை சார்ந்துள்ளது. இருப்பினும், 16/8 டயட் முறை பரவலாக விரும்பப்படுகிறது. இது 8 மணி நேரம் சாப்பிடுவது மற்றும் 16 மணி நேரம் சாப்பிடக்கூடாது என்பதாகும்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
0 Comments:
Post a Comment