SBI Jobs | எஸ்பிஐ வங்கியில் 800 அதிகாரி பணியிடங்கள்: உடனே அப்ளை பண்ணுங்க.. - Agri Info

Adding Green to your Life

September 25, 2024

SBI Jobs | எஸ்பிஐ வங்கியில் 800 அதிகாரி பணியிடங்கள்: உடனே அப்ளை பண்ணுங்க..

 பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) பல்வேறு பணிகளுக்கான சிறப்பு கேடர் அதிகாரி (SCO) பணிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க், இந்தியாவிலேயே பெரிய வங்கி என்பது மட்டுமல்ல, அதிக வாடிக்கையாளர்களை கொண்ட வங்கியும் கூட. வங்கி வேலைக்கு ஆசைப்படும் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக இருப்பதும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாதான். இந்தநிலையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பல்வேறு பணிகளுக்கான சிறப்பு கேடர் அதிகாரி (SCO) பணிக்கான 800 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரியின் கீழ் பல்வேறு தரங்களில் உள்ள பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப எஸ்பிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இவை அனைத்தும் டெக்னிக்கல் பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் ஆகும்.

துணை மேலாளர் (சிஸ்டம்) மற்றும் உதவி மேலாளர் (சிஸ்டம்) என இரு பதவிகளின் கீழ் 798 பணியிடங்களும், இதுதவிர, துணைத் தலைவர் (IT Risk) மற்றும் உதவி துணைத் தலைவர் (IT Risk) ஆகிய இரு பிரிவுகளில் தலா ஒரு பணியிடங்கள் என இரண்டு பணியிடங்களும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த பதவிகளுக்கு கல்வித்தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் பி.இ, பி.டெக், எம்சிஏ, எம்.டெக் அல்லது எம்.எஸ்.சி ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும் பணியைப் பொறுத்து 2-5 ஆண்டுகள் அது தொடர்புடைய பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த பணிகளுக்கான வயது வரம்பு 25 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். உதவி மேலாளர் பணிக்கு மட்டும் வயது வரம்பு 21 - 30க்குள் இருக்க வேண்டும். உதவி மேலாளர் பதவிக்கு மட்டும் எழுத்து தேர்வும், துணை மேலாளர் பதவிக்கு நேர்முகத் தேர்வு மூலமாகவும் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

துணை மேலாளர் பணியிடங்களுக்கு ஊதியமாக ரூ.64,820 - ரூ.93,960 வரை மாதம் கிடைக்கும். அதேநேரம், உதவி மேலாளர் பணியிடங்களுக்கு ஊதியமாக ரூ.48,480 - ரூ.85,920 வரை மாதம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அக்டோபர் மாதம் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க பொது, ஒபிசி மற்றும் EWS பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.750 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். அதே சமயம் எஸ்.சி, எஸ்.டி மற்றும் PwBD பிரிவினருக்கு இந்த கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://sbi.co.in/web/careers என்ற அதிகாரப்பூர்வ SBI இணையதளத்தைப் பார்வையிடவும். அடுத்ததாக “Current Openings” என்பதைக் கிளிக் செய்யவும். பிறகு ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகள் (SCO) ஆட்சேர்ப்புக்கான விளம்பரத்தைக் கண்டறிந்து, “ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்” என்பதைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கவும்.

இதே இணையதள பக்கத்தில் இந்த பணியிடங்களுக்கான கூடுதல் விவரங்கள் தரப்பட்டுள்ளன. அதனை தெளிவாக படித்து விண்ணப்பிக்கவும்.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

No comments:

Post a Comment