இயற்கையாக கிடைக்க கூடிய பல உணவுகள் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தந்தாலும், அவற்றை சாப்பிடுவதில் சில முறைகள் உள்ளன. இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் இதுகுறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது.
உதாரணமாக பால் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். தினமும் தயிர் சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி பலப்படும். நெய் உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. ஆனால் இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து சாப்பிடலாமா? இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இதோ இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.
தயிரின் நன்மைகள்
தயிரில் நமது உடலுக்கு நன்மை செய்யும் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. தயிர் சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்த வேலை செய்யும் நொதிகளை உடலுக்கு வழங்குகிறது. தினமும் 1 கப் தயிர் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. தயிர் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். தயிரில் கால்சியம் சத்து உள்ளது. இது நமது பற்கள் மற்றும் எலும்புகளுக்கு நன்மை பயக்கும். தயிர் உடலில் நீர்ச்சத்தை பராமரிக்க உதவுகிறது.
நெய்யின் நன்மைகள்
தினமும் நெய் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம். நெய் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். தினமும் 1 ஸ்பூன் நெய் சாப்பிட்டு வந்தால் நோய்களை எதிர்த்துப் போராடலாம். ஆனால் தயிரையும் நெய்யையும் சேர்த்து சாப்பிடலாமா? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.
தயிரையும் நெய்யையும் ஏன் ஒன்றாகச் சாப்பிடக்கூடாது?
தயிர் மற்றும் நெய் சேர்த்து சாப்பிடுவது ஆயுர்வேதத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இரண்டும் பால் பொருட்களாக இருந்தாலும், அவற்றின் தன்மை வேறுபட்டது. தயிர் குளிர்ச்சியாக இருக்கும். அதே சமயம் நெய் உடலை சூடாக்கும். இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். சிலருக்கு நெய் பரோட்டாவை தயிருடன் சேர்த்து சாப்பிடும்போதெல்லாம் வயிற்று உப்புசம் அல்லது வாய்வு தொல்லை ஏற்படுவதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். வயிற்றில் இந்த இரண்டு பொருட்களும் ஒன்றாக ஜீரணிப்பதில் சிக்கல் இருப்பதால் இது நிகழ்கிறது.
தயிர் மற்றும் நெய் சேர்த்து சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:
மோசமான செரிமானம்
அதிக கொலஸ்ட்ரால் அளவு
இதய நோய்
தோல் ஒவ்வாமை
தயிருடன் வேறு என்ன சாப்பிடக்கூடாது?
புளிப்பு பழங்களை தயிருடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. அவை: எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு.
தக்காளியை தயிருடன் சாப்பிடுவதும் தீங்கு விளைவிக்கும்.
தயிர் மற்றும் முலாம்பழம் சேர்த்து சாப்பிடுவது ஆயுர்வேதத்திலும் தடை செய்யப்பட்டுள்ளது.
பனீர் மற்றும் பாகற்காய் கூட தயிருடன் சாப்பிடக்கூடாது.
No comments:
Post a Comment