அரசு ஊழியர்கள் அனைவரும் பணியின் போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் அணிய வேண்டும் - மனித வள மேலாண்மைத் துறையின் கடிதம்!
அரசு ஊழியர்கள் அனைவரும் அலுவலக நேரத்தில் தவறாமல் புகைப்பட அடையாள அட்டையை அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்துத் துறைகளின் தலைவர்களுக்கும் அரசு அவ்வப்போது ஆணைகள் அறிவுறுத்தங்களைப் பிறப்பித்து வருகிறது . மேலும் அரசுக் கடித எண் 5550 ஏ 220201 பணியாளர் மற்றும் திருவாகச் சீர்திருத்த ( ஏத் துறை நாள் 902.2020 இல் அடையாள அட்டை அணிவது தொடர்பான அறிவுறுத்தங்கள் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளன.
அவ்வரசுக்கடிதத்தில் அனைத்துத் துறைத் தலைவர்கள் மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கீழ்நிலை அலுவலகங்களுக்கு அரசு ஆணைகள் அறிவுறுத்தங்களின்படி , பணியாளர்கள் , புகைப்பட அடையாள அட்டையைத் தவறாமல் அணியுமாறு அறிவுறுத்தியும் அவ்வாறு புகைப்பட அடையாள அட்டைகளை அணியாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இவ்வரசாணை அறிவுரைகள் பின்பற்றப்படாத நேர்வுகளில் , பொதுமக்கள் தகுந்த நடவடிக்கை மற்றும் தீர்வுக்காக அலுவலகத் தலைவர் அல்லது சம்பந்தப்பட்ட அலுவலகம் துறைத் தலைவர் ஆகியோரை அணுகி தீர்வு பெறலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Click Here to Download - ID Card Compulsory For Government Employees On Duty - Order Letter - Pdf
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment