வயதாகும்போது சிந்திக்கும் திறன், கற்றுக்கொள்வது மற்றும் நினைவில் கொள்வது போன்ற அறிவாற்றல் ஆரோக்கியம் ஒருவேளை குறைய ஆரம்பிக்கலாம். இது அறிவாற்றல் குறைபாடு அல்லது இயலாமை பிரச்சனையை வயதானவர்களுக்கு கொண்டு வருகிறது. அறிவாற்றல் குறைபாட்டின் மீது முட்டைகளின் நன்மைகளை வெளிப்படுத்தும் ஆய்வொன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது.
55 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள், தங்கள் டயட்டில் முட்டைகளை தவறாமல் சேர்த்துக் கொள்ளும் போது, அவர்களது சொற்பொருள் நினைவாற்றல் மேம்படுவது தெரிந்தது. இது உண்மைத் தகவல்களைச் சேமிக்கும் நீண்ட கால நினைவாற்றலையும், மன திறன்களை உள்ளடக்கிய சிறந்த நிர்வாகச் செயல்பாட்டையும் குறிக்கிறது. நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் திறன்கள் வயதுக்கு ஏற்ப குறையும் என்றாலும், முட்டைகளை தொடர்ந்து உட்கொள்வது இந்தச் செயல்முறையை மெதுவாக்கும்.
அறிவாற்றல் ஆரோக்கியத்தை பராமரிக்கும் முட்டை
இந்த ஆய்வில், வாரத்திற்கு அதிக முட்டைகளை உட்கொள்ளும் பெண்கள் நான்கு ஆண்டுகளில் சொற்பொருள் நினைவகம் மற்றும் நிர்வாக செயல்பாட்டில் குறைவான சரிவைக் காட்டியுள்ளனர். பெண்கள் தங்கள் முட்டை நுகர்வை அதிகரித்த போது, அறிவாற்றல் ஆரோக்கியத்தின் சரிவு 0.1 புள்ளிகளாக குறைந்துள்ளது. அறிவாற்றல் ஆரோக்கியம், சொற்பொருள் நினைவகம் மற்றும் நிர்வாக செயல்பாடு ஆகியவற்றின் வீழ்ச்சியை நிறுத்தக்கூடிய உணவு எதுவும் இல்லை என்றாலும், இந்தச் செயல்முறையை மெதுவாக்குவதில் முட்டைகள் குறிப்பிடத்தக்க நன்மைகளை தருகின்றன.
மேலும், ஒரு வாரத்திற்கு ஐந்து முறைக்கு மேல் முட்டைகளை உட்கொள்ளும் பெண்கள், முட்டை சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடுகையில், நான்கு ஆண்டுகளில் அவர்களின் அறிவாற்றல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க அரை புள்ளி குறைவான சரிவைக் காட்டியுள்ளனர்.
முட்டையில் அதிக அளவு கொலஸ்ட்ரால் இருந்தாலும், இது தீங்கு விளைவிப்பதில்லை என்றும் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. புரதம் மற்றும் வைட்டமின் நிரம்பிய உணவுப் பொருட்கள், அறிவாற்றல் குறைபாட்டின் செயல்முறையை மெதுவாக்கும். மேலும், முட்டைகளை அளவோடு சாப்பிட்டால், அவை மூளையின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.
முட்டைகள் அறிவாற்றல் ஆரோக்கியத்தின் வீழ்ச்சியை மெதுவாக்கும் என்பதால், அவை நேரடியாக மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் என்று அர்த்தமல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் எடுத்துரைத்துள்ளனர். அறிவாற்றல் குறைபாட்டின் விகிதத்தை குறைக்க முட்டைகள் எவ்வாறு உதவுகின்றன என்பதை மட்டுமே இந்த ஆய்வு நோக்கமாக கொண்டுள்ளது.
முட்டையை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் சில நன்மைகள்:
ஒரு முட்டையில் ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. உடலுக்கு வலு சேர்க்கும் புரதத்தை மனித உடலால் அதைத் உற்பத்தி செய்ய முடியாது என்பதால் இது மிகவும் அவசியம். செலினியம், பாஸ்பரஸ், கோலின், வைட்டமின் பி12 மற்றும் பல ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை வழங்க முட்டை உதவுகிறது. மேலும் இது செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இரத்தத்தில் நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கவும் ட்ரைகிளிசரைடுகளை குறைக்கவும் உதவுகிறது.
No comments:
Post a Comment