Search

வெறும் வயிற்றில் பால் குடிக்கலாமா.. கூடாதா..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

 
பல காலமாகவே பால் என்பது ஊட்டச்சத்தின் களஞ்சியமாக திகழ்ந்து வருகிறது. கால்சியம், புரோட்டீன் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள், மினரல்கள் பாலில் நிறைந்துள்ளது. எனினும் வெறும் வயிற்றில் பாலை குடிக்கலாமா, வேண்டாமா? குடிப்பதனால் பலன் கிடைக்குமா அல்லது பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுமா என்பது பற்றிய விவாதம் தொடர்ந்து இருந்து வருகிறது. பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம்முடைய எலும்பு ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கு உதவுவதால் நமது சரிவிகித உணவுக்கு ஒரு அற்புதமான கூடுதலாக பால் அமைகிறது.

பால் குடிப்பதனால் கிடைக்கும் பலன்கள் யாவை?

பால் என்பது கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் புரோட்டீன் ஆகியவற்றின் அற்புதமான மூலமாக இருப்பதால் இது ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களை அமைப்பதற்கும் பராமரிப்பதற்கும் உதவுகிறது. மேலும் இது கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளின் நல்ல சமநிலையை நமக்கு வழங்குகிறது. இதனால் இது ஒரு ஆல்ரவுண்ட் உணவாக அமைகிறது. அது மட்டுமல்லாமல் பாலில் உள்ள வைட்டமின் D, வைட்டமின் B12 மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும், மினரல்களும் நம்முடைய உடலில் உள்ள பல்வேறு செயல்பாடுகளுக்கு உதவுகிறது.

News18

பாலை வெறும் வயிற்றில் குடிக்கலாமா?

பாலை வெறும் வயிற்றில் குடிப்பதால் குடிப்பது ஆபத்தை ஏற்படுத்தும் என்று பலர் கருதுகின்றனர். ஒரு சிலருக்கு இதனால் செரிமான அசௌகரியம் ஏற்படலாம். லாக்டோஸ் ஒத்துகொள்பவர்களுக்கு வெறும் வயிற்றில் பாலை குடிப்பதால் அஜீரணம் சம்பந்தமான பிரச்சனைகள் உருவாகலாம். ஆனால் பொதுவாக வெறும் வயிற்றில் பால் குடிப்பதால் எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படுவதாக எந்த ஒரு ஆய்விலும் கண்டுபிடிக்கப்படவில்லை.

சொல்லப்போனால், அதிக புரோட்டீன் நிறைந்த பாலை காலை உணவுக்கு பருகுவது டயாபடீஸ் கொண்ட நபர்களில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கு உதவும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பால் குடிக்கும் போது நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்

  • லாக்டோஸ் செரிமானம் செய்யும் திறன் இல்லாத நபர்களுக்கு பால் குடிப்பதால் வயிற்று உப்புசம், வாயு தொல்லை மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமானம் சம்பந்தப்பட்ட அறிகுறிகள் ஏற்படலாம். ஒருவேளை உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் மருத்துவரை ஆலோசித்து அதற்கு ஏற்றவாறு உங்களுடைய உணவில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். வழக்கமான பாலுக்கு பதிலாக நீங்கள் பாதாம் பால், சோயா பால் அல்லது தேங்காய் பால் போன்றவற்றை சாப்பிடலாம்.

  • இது தவிர பால் என்பது ஒரு சரிவிகித உணவின் அற்புதமான பகுதியாக அமைகிறது. லாக்டோஸ் சகிப்புத்தன்மை கருத்தில் கொள்ள வேண்டும் ஒரு விஷயம் தான் என்றாலும் வெறும் வயிற்றில் பால் குடிப்பது பொதுவாக பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. எனினும் உங்களுடைய தனிப்பட்ட உடலின் அறிகுறிகளை உணர்ந்து அதற்கேற்றவாறு மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment