தமிழக பள்ளிக்கல்வித் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் மற்றும் இதர பணிகளை கண்காணிப்பதற்காக மாதந்தோறும் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பு மாதந்திர அலுவல் ஆய்வுக் கூட்டம் துறையின் செயலர் சோ.மதுமதி தலைமையில் காணொலிக் காட்சி வழியாக நேற்று நடைபெற்றது. இதில் துறைசார்ந்த இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் தமிழக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்களின் தற்போதைய நிலை, பழுதான நிலையில் உள்ள கட்டிடங்களை அகற்றும் பணிகளின் நிலை, நீதிமன்ற வழக்குகள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முன்னேற்பாடுகள், மாணவர்களை தேர்வுக்கு தயார்ப்படுத்துதல் ஆகிய செயல்பாடுகளை தீவிரமாக மேற்கொள்ளவும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு செயலர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இத்தகவலை கல்வித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment