அமெரிக்காவில் நடைபெற்ற சமீபத்திய ஆய்வில், மக்களின் சர்க்கரை நுகர்வு தொடர்பான பழக்கவழக்கங்கள் மற்றும் சர்க்கரை அளவுகளின் ஹைட்ரேஷன் லெவலில் ஏற்படுத்தும் பாதிப்பு உள்ளிட்டவை குறித்த சில முக்கிய தகவல்களை வெளிப்படுத்தி உள்ளது.
ஹிண்ட் வாட்டர் சார்பாக டாக்கர் ரிசர்ச் நடத்திய இந்த ஆய்வில் சுமார் 2,000 அமெரிக்கர்கள் பங்கெடுக்க வைக்கப்பட்டனர். studyfinds.org-ல் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில் தெரியவந்த தகவல்கள் பின்வருமாறு: சராசரியாக ஒரு அமெரிக்கர் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 80 பவுண்டுகள் சர்க்கரை அதாவது 36,000 கிராம் (36 கிலோ) உட்கொள்வது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெரும்பாலான திரவ உட்கொள்ளல் சோடா என கூறிய 28% பேர்…
2,000 அமெரிக்கர்கள் பங்கேற்ற ஆய்வின் முடிவில் சராசரியாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 99 கிராம் சர்க்கரையை உட்கொள்வது தெரியவந்துள்ளது. இது இரண்டு 12-அவுன்ஸ் சோடா கேன்களில் உள்ளதை விட அதிக சர்க்கரை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வருட காலத்திற்கு இதை கணக்கிட்டால், மொத்தம் 80 பவுண்டுகள் சர்க்கரை வருகிறது.
ஆய்வு முடிவுகளின்படி, கேள்விகளுக்கு பதிலளித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் (85 சதவீதத்தினர்) தங்களது சர்க்கரை நுகர்வை குறைக்க தீவிர முயற்சி செய்கிறார்கள். அதேபோல பதிலளித்தவர்களில் சுமார் 34% பேர் ஒரு நாளில் தங்கள் திரவ உட்கொள்ளலின் பெரும்பகுதி காலை காஃபியிலிருந்து வருவதாக குறிப்பிட்டு உள்ளனர். மேலும் 28% பேர் தாங்கள் பெரும்பாலும் சோடாவை திரவ நுகர்விற்காக பருகுவதாக கூறியுள்ளார்கள். எனினும் பதிலளித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (51 சதவீதம் பேர் தங்களுக்கு சுகர் கிரேவிங்ஸ் ஏற்படும்போது, தங்களின் உடல் உண்மையில் ஹைட்ரேஷனிற்கு ஏங்குவதாகவும், அந்த சமயத்தில் சுகர் கிரேவிங்ஸை தடுக்க போதுமான தண்ணீரை குடிக்கிறார்கள் என்றும் கூறியுள்ளனர்.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் சராசரி நபர்கள் தங்களின் வழக்கமான ஒரு நாளில் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் பரிந்துரைத்த சர்க்கரை அளவை விட இரண்டு மடங்கு அதிகமாகவும், யு.எஸ்.நேஷனல் அகாடமி ஆஃப் மெடிசின் பரிந்துரைத்ததை விட குறைவான அளவு தண்ணீரையும் பருகுவது தெரியவந்துள்ளது. ஹிண்ட் வாட்டரின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரியான ஏமி கால்ஹவுன் ராப் தனது அறிக்கை ஒன்றில் இது ஏன் நடக்கிறது என்பதை புரிந்து கொள்வது முக்கியம் என்கிறார்.
சுகர் கிரேவிங்ஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது…
சுகர் கிரேவிங்ஸிற்கு பின்னால் உள்ள உணர்ச்சி தூண்டுதல்கள் குறித்து சர்வே ஆராய்ந்தது. இதன்படி மன அழுத்தம் (39 சதவிகிதம்), சலிப்பு (36 சதவிகிதம்), சோர்வு (24 சதவிகிதம்) மற்றும் தனிமை (17 சதவிகிதம்) ஆகியவை சுகர் கிரேவிங்ஸை தூண்டும் உணர்ச்சிகளாகும். அதேபோல் இனிப்புகளுக்காக ஏங்கும்போது, கவலை (23 சதவீதம்), எரிச்சல் (22 சதவீதம்), பொறுமையின்மை (20 சதவீதம்) மற்றும் அன்ப்ரொட்டக்ட்டிவ் (20 சதவீதம்) இருப்பதாக ஆய்வில் பதிலளித்தவர்கள் தெரிவித்தனர்.
அதே நேரம் ஒரு திரைப்படத்தை பார்க்கும்போது (31 சதவீதம்), உணவை சாப்பிட்டு முடிக்கும்போது (31 சதவீதம்), மதிய வேளையில் ஆற்றல் தேவைப்படும்போது (30 சதவீதம்) மற்றும் ஒரு மோசமான வேலை நாள் (19 சதவீதம்) உள்ளிட்ட சூழலின்போதும் இனிப்பான ஒன்றை விரும்புவதாக ஆய்வில் பங்கேற்றவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சர்க்கரை பிரியர்களுக்கு மத்திய பிற்பகல் மிகவும் ஆபத்தான நேரம். ஏனெனில், சுகர் கிரேவிங்ஸ் சராசரியாக பிற்பகல் 3.12 மணிக்கு ஏற்படும் வாய்ப்பு அதிகம் காணப்படுவதாக கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு சராசரி மனிதனால் சுகர் கிரேவிங் உணர்வு தோன்றிய பிறகு எவ்வளவு நேரம் இனிப்புகளை எடுத்துக் கொள்ளாமல் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்?. 13 நிமிடங்கள் மட்டுமே.
No comments:
Post a Comment