Search

சாப்பிட்ட உடன் டீ, காபி குடிக்கும் பழக்கம் இருக்கா... இந்த வார்னிங் உங்களுக்குத் தான்...

 இன்றைய கால கட்டத்தில் டீ , காபி குடிக்கும் பழக்கம் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். காலை, மாலையில் டீ காபி இடம் பெறாத வீடுகளைப் பார்ப்பது கொஞ்சம் அரிதுதான். கணினியில் வேலை பார்ப்பவர்கள் முதல் தீவிர உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் வரை வேலைக்கு இடையே கண்டிப்பாக டீ, காபி தான் அருந்துவதைப் பார்க்க முடியும்.

பலருக்கு டீ அல்லது காபி குடிக்காவிட்டால் அன்றைய தினமே எதையோ மிஸ் செய்வது போல உணர்வார்கள். குளிர்காலமோ, வெயில் காலமோ டீ கடையில் மட்டும் எப்போதும் கூட்டம் நிறைந்து இருக்கும். மதிய நேரத்தில் கூட பலரும் டீ காபி அருந்தும் பழக்கம் கொண்டு இருக்கிறார்கள்.

இளைஞர்கள் பலரும் தங்களுக்குக் காலை உணவே இந்த டீ தான் என்று சொல்லும் அளவுக்குப் பட்டினி கிடந்தால் கூட மறக்காமல் டீ குடிப்பதைப் பார்க்க முடிகிறது. இப்படி இந்தியர்களின் உணவு கலாசாரத்தில் இந்த சூடான பானங்கள் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுவிட்டன.

டீ மற்றும் காபியில் உள்ள காஃபினை அதிகமாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு அவ்வளவு நல்லதல்ல என்று பல்வேறு ஆய்வுகளும் வலியுறுத்துகின்றன. இந்த நிலையில் டீ காபி அருந்துபவர்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எனப்படும் ஐசிஎம்ஆர் (ICMR) புதிய அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தனது துணை அமைப்பான தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (NIN) இணைந்து
மக்களின் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கத்தை மேம்படுத்தும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

டீ மற்றும் காபியில் காஃபின் கலந்துள்ளது எனவே இது மத்திய நரம்பு மண்டலத்தையும் உடலியல் சார்பு நிலையையும் தூண்டுகிறது 150 மில்லி கப் காபியில் 80-120 மில்லி கிராம் காஃபின் உள்ளது. இன்ஸ்டண்ட் காபியில் 50-65 மில்லிகிராமும், டீயில் 30-65 மில்லிகிராம் காஃபினும் உள்ளது நாளொன்றுக்கு 300 மில்லி கிராமிற்கு அதிகமாக காஃபினை சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லது அல்ல.
அதேபோல சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும் சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரத்திற்குப் பின்பும் டீ, காபி அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த பானங்களில் டான்னின்ஸ் உள்ளது. இந்த டான்னின்ஸினால் உணவில் . இருந்து உடலுக்கு இரும்பு சத்துக்கள் உறிஞ்சப்படாமல் தடைப்படும். இதனால் அனீமியா போன்ற உடல் நலக்குறைவு ஏற்படும்.

அதிகமாகக் காபி, டீ குடிப்பது ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பால் கலக்காத டீ குடிப்பது இரத்த ஒட்டத்தை மேம்படுத்துவதோடு, கரோனரி தமனி நோய் மற்றும் வயிற்றுப் புற்று நோய் ஆகிய அபாயத்தைக் கட்டுப்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment