குளிர்காலத்தில் தண்ணீர் குறைவாக குடிப்பதால் சிறுநீரக கல் உருவாகுமா..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..! - Agri Info

Adding Green to your Life

October 24, 2024

குளிர்காலத்தில் தண்ணீர் குறைவாக குடிப்பதால் சிறுநீரக கல் உருவாகுமா..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

 நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வில், குளிர்காலங்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சிறுநீரில் கால்சியம் அளவுகள் கணிசமாக அதிகமாக இருப்பதால், கல் உருவாகும் அபாயத்தை அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக வெயில் காலத்தில் தான் உடலுக்கு அதிக அளவிலான தண்ணீர் தேவைப்படும். மாறாக, வெப்பநிலை குறைவாக இருக்கும் குளிர் காலத்தில் உடலில் இருந்து அதிகமாக நீரிழப்பு ஏற்படுவதில்லை, எனவே தாகம் மிகவும் குறைவாகவே இருக்கும்.

அதேநேரத்தில் வெயில் காலத்தில் உடலுக்கு தேவையான நீரில் பற்றாக்குறை ஏற்படுவதால், சிறுநீர சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகளவில் பாதிக்கின்றன. இதில் முக்கியமான ஒன்று சிறுநீரக கல் பிரச்சனை. ஆனால், குளிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனை இருக்காது என்றே மக்கள் நம்புகின்றனர். ஆனால் இது ஒரு வலி மிகுந்த சுகாதார பிரச்சனைக்கு காரணமாகும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.

இதுகுறித்து நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வுகள், குளிர்காலத்தில் நீர் உட்கொள்ளல் குறைக்கப்படுவதால் சிறுநீரக கல் வழக்குகள் அதிகரித்திருப்பதற்கு முக்கிய பங்காற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. சில பகுதிகளில் குளிர் காலத்தில் சிறுநீரக கல் பிரச்சனை 30% வரை அதிகரித்துள்ளன. இதுகுறித்து ஐதராபாத்தின் தில்சுக்நகரில் உள்ள ஏஐஎன்யு மருத்துவமனையின் சிறுநீரக சிகிச்சை பிரிவின் தலைமை மற்றும் மூத்த மருத்துவரான பி.எஸ்.வாலி சிறுநீர பிரச்சனை குறித்து விவரித்துள்ளார்.

News18

நாடு முழுவதிலும் உள்ள சிறுநீரக மருத்துவர்கள், இந்த அடிக்கடி கவனிக்கப்படாத குளிர்கால சுகாதார அபாயம் குறித்து எவ்வாறு எச்சரிக்கிறார்கள் என்பதை அவர் விளக்கினார். உடலில் போதிய அளவு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவது, சிறுநீரில் அழுத்தத்தை தருகிறது மற்றும் தேவையற்ற பொருட்கள் மற்றும் தாதுக்கள் சிறுநீரகத்திற்குள் குவிந்து சிறுநீரக கற்கள் உருவாக வழிவகுக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர் என்று அவர் கூறினார்.

குளிர்காலம் தொடர்பான நீரிழப்பு சங்கடமானதாக இருக்காது, ஆனால் இது ஆபத்தானது. சிறுநீரக கற்கள் ஒருவரின் வாழ்நாளில் 10 பேரில் 1 நபரை பாதிக்கின்றன, ஆண்டுதோறும் அரை மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் சிறுநீரக கல் பிரச்சனைக்காக அவசர சிகிச்சை பெறுகின்றனர். சிறுநீரகக் கல்லை கடந்து செல்லும் வலி, குழந்தை பிறப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே இதனை தடுப்பது முக்கியமானது. பருவ மாற்றங்களுக்கும், சிறுநீரக ஆரோக்கியத்திற்கும் இடையிலான தொடர்பு ஒன்றும் புதியதல்ல.நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வில், குளிர்காலங்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சிறுநீரில் கால்சியம் அளவுகள் கணிசமாக அதிகமாக இருப்பதால், கல் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது. இந்த பருவ மாறுபாடு நம் உடலுக்கு தேவையான தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது குறித்த திட்டங்களை வகுக்க உதவுகிறது.

சுவாரஸ்யமாக, சிறுநீரக கற்களுக்கான சிகிச்சையானது பண்டைய காலங்களிலிருந்து ஒரு வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. கிமு 600 இல் ஆட்சி புரிந்த ஓர் இந்திய மன்னரின் முக்கிய மருத்துவரான சுஷ்ருதா, முதன்முதலில் சிறுநீர்க்குழாய் வழியாக கல்லை அகற்றினார்.இந்த ஆரம்பகால மருத்துவ முன்னேற்றம் நவீன சிகிச்சைகளுக்கு வழி வகுத்தது, இந்த வலி மிகுந்த நிலைக்கு எதிரான நீண்ட காலப் போரை இது எடுத்துக்காட்டுகிறது.

News18

சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி?

சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் குறைந்தது 2 லிட்டர் (8 கப்) தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த எளிய பழக்கம் சிறுநீரை நீர்த்துப்போகச் செய்வதன் மூலமும், சிறுநீர்ப் பையில் தங்கும் தாதுக்களை வெளியேற்றுவதன் மூலமும் கல் உருவாகும் அபாயத்தை குறைக்க உதவும்.

என்ன தான் அதிகளவு தண்ணீர் குடிப்பது சிறுநீரக பிரச்சனையில் மாற்றத்தை தந்தாலும், தண்ணீரைத் தாண்டி, சிறிய உணவு மாற்றங்களும், உடல்நலனில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதில் ஆச்சரியப்படும் விதமாக, கால்சியம் நிறைந்த உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன, ஏனெனில் அவை குடலில் ஆக்சலேட்டுகளுடன் பிணைக்கப்படுகின்றன, கால்சியம் ஆக்சலேட் கற்களின் அபாயத்தைக் குறைக்கின்றன. இது மிகவும் பொதுவான ஒரு வகை. கூடுதலாக, மெக்னீசியம் மற்றும் சிட்ரேட் உட்கொள்ளலை அதிகரிப்பது கல் உருவாவதைத் தடுக்கலாம், பொட்டாசியம் சிட்ரேட் சிறுநீர் சிட்ரேட் அளவை அதிகரிக்கவும், கல் உருவாவதைக் குறைக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.

குளிர்காலத்தில் நிலவும் குளிர்ச்சிக்கு எதிரான வழிகளை பற்றி நாம் யோசிக்கும் போது, ​​தண்ணீர் குடிக்க மறக்க வேண்டாம். நன்கு ஹைட்ரேட்டாக இருப்பது சிறுநீரக கற்கள் உருவாவதை தடுப்பதன் மூலம் சிறுநீரக மருத்துவரை அணுகும் சூழல் ஏற்படுவதையும் தடுக்கிறது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment