தினசரி காலை நேரத்தில் ஃபிரெஷ்ஷான ஆரஞ்சு பழத்தை பிழிந்து ஜூஸ் எடுத்து பருகுவது உங்கள் காலை டயட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ், வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்ற முக்கிய ஊட்டசத்துக்களை பெற உதவும் சிறந்த வழிகளில் ஒன்றாகும்.
இனிப்பு மற்றும் லேசான புளிப்பு சுவை கொண்ட ஆரஞ்சு ஜூஸை ஒரு கிளாஸ் பருகுவது புத்துணர்ச்சி அளிப்பதோடு நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தை சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கிறது மற்றும் உடனடி ஆற்றலை வழங்குகிறது. தவிர இதய ஆரோக்கியம், சரும ஆரோக்கியம், மூளை ஆரோக்கியம் மற்றும் சிறுநீரக கற்களில் இருந்தும் ஆரஞ்சு ஜூஸ் நம்மை பாதுகாக்கும்.
எனினும் கடைகளில் விற்கப்படும் ஆரஞ்சு ஜூஸில் சர்க்கரை அல்லது செயற்கை இனிப்புகள் மற்றும் பிற கெமிக்கல்ஸ் சேர்க்கப்பட்டிருக்கும் என்பதால் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அவற்றை வாணி பருகாமல் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் இவை இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்.
இயற்கையான மற்றும் ஃபிரெஷ்ஷான ஆரஞ்சு ஜூஸ் பருகுவதால் கிடைக்கும் சில அற்புத நன்மைகள் இங்கே…
- தினசரி காலையில் ஒரு கிளாஸ் ஃப்ரெஷ் ஆரஞ்சு ஜூஸ் நமக்கு போதுமான வைட்டமின் சி-யை வழங்கலாம், மேலும் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க மற்றும் ஜலதோஷம் அல்லது காய்ச்சல் போன்ற தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாக்கும். வைட்டமின் சி நிறைந்துள்ள காரணத்தால் ஆரஞ்சு ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு தொற்றுக்களை எதிர்த்து போராடுவதன் மூலமும் காயங்களைக் குணப்படுத்துவதன் மூலமும் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுவதாக அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியான ஒரு ஆய்வு கூறுகிறது.
- வழக்கமான அடிப்படையில் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வருவது ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுவது மற்றும் HDL கொலஸ்ட்ரால் லெவல் அதிகரிப்பதுடன் தொடர்புடையது. இவை இரண்டுமே இதய நோய்க்கான ஆபத்து காரணிகளாகும்.
- 1 கிளாஸ் ஆரஞ்சு ஜூஸில் சுமார் 88% தண்ணீர் உள்ளது, எனவே இந்த ஜூஸ் நம்மி ஹைட்ரேட்டாக வைத்திருக்கும். தவிர, இதில் பொட்டாசியம், வைட்டமின்ஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன, இவை உடல் மற்றும் மூளை ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்கும்.
- ஆரஞ்சு ஜூஸில் குறிப்பாக pulpy வெரைட்டிகளில் டயட்ரி ஃபைபர் உள்ளது, இது செரிமான அமைப்பு சிறப்பாக செயல்பட உதவும் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
- அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனின் ஆய்வின்படி, ஆரஞ்சு ஜூஸ் சர்க்கரை அளவை மேம்படுத்தும், இதனால் நம் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும் மேலும் இந்த ஜூஸில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன, இவை மன அழுத்தத்தைக் குறைக்கின்றன மற்றும் விரைவாக ஆற்றலை அளிக்கிறது.
- வழக்கமாக ஆரஞ்சு ஜூஸ் குடிக்கும் பெரியவர்கள் சிறந்த நினைவாற்றல், விரைவாக பதில் அளிக்கும் தன்மை போன்ற சிறந்த அறிவாற்றல் செயல்பாடுகளை கொண்டிருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த வகையில் ஆரஞ்சு ஜூஸானது மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அதே போல ஜூஸ்களின் ஊட்டச்சத்து மதிப்பு பழங்களை விட குறைவாக இருக்கும். இதனால் பல வைட்டமின்ஸ் மற்றும் டயட்தி ஃபைபரை இழக்க நேரிடலாம். எனவே பழங்களை ஜூஸ் போடாமல் அப்படியே சாப்பிட்டால் இன்னும் நல்லது.
- இரும்புச்சத்து நிறைந்த உணவுகளுடன் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது உடலின் இரும்பு உறிஞ்சும் தன்மையை மேம்படுத்தும், இது இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு சிறந்தது.
- ஆரஞ்சு பழ ஜூஸில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்புகளை வலுவாக பராமரிக்க முக்கியமானது.
- ஆரஞ்சு பழ ஜூஸில் உள்ள ஃபிளாவனாய்ட்ஸ் மற்றும் பிற கலவைகள் உடலில் ஏற்படும் அழற்சி/வீக்கத்தை குறைக்க உதவும்.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
- நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஆரஞ்சு ஜூஸை விட ஆரஞ்சு பழத்தை அப்படியே சாப்பிட கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் ஆரஞ்சு ஜூஸ் 100-க்கு 66-76 கிளைசெமிக் இன்டெக்ஸை கொண்டுள்ளது, இது அதிகமாக கருதப்படுகிறது. தவிர ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் ரத்த சர்க்கரை அளவு கணிசமாக அதிகரிக்கும்.
- ஒரு கிளாஸ் ஃப்ரெஷ் ஆரஞ்சு ஜூஸை பிழியும் போது, நீங்கள் அதில் சர்க்கரையை சேர்க்க வேண்டாம், அதன் இயற்கை இனிப்போடு பருகுங்கள்.
- ஜூஸ் ரெடி செய்த உடனேயே பருகுங்கள், ஜூஸை நீண்ட நேரம் வைத்திருப்பது ஊட்டச்சத்துக்களை இழக்க வழிவகுக்கும். சில பழ விதைகள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் ஜூஸை தயாரிக்கும் போது விதைகளை அகற்றி விடுங்கள்.
No comments:
Post a Comment