அடிக்கடி உங்களுக்கு யூரின் இன்ஃபெக்ஷன் வருமா… அப்படின்னா முதல்ல நீங்க செக் பண்ண வேண்டியது உங்க ஃபிரிட்ஜை தான்!!! - Agri Info

Adding Green to your Life

October 24, 2024

அடிக்கடி உங்களுக்கு யூரின் இன்ஃபெக்ஷன் வருமா… அப்படின்னா முதல்ல நீங்க செக் பண்ண வேண்டியது உங்க ஃபிரிட்ஜை தான்!!!

 சிறுநீர் பாதை தொற்று அல்லது யூரினரி ட்ராக்ட் இன்பெக்‌ஷன் என்பது சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, சிறுநீர் பாதை போன்ற சிறுநீரக அமைப்பின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆண்களுடன் ஒப்பிடும் பொழுது பெண்களுக்கு அடிக்கடி சிறுநீரக நோய் தொற்று ஏற்படுகிறது.

சிறுநீரக நோய் தொற்று என்பது ஒருவருக்கு அசௌகரியத்தையும், வலியையும் ஏற்படுத்தும். ஆனால் அது சிறுநீரகங்களுக்கு பரவி விட்டால் அதனால் மோசமான உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம். ஒருவேளை உங்களுக்கு அடிக்கடி சிறுநீரக நோய் தொற்று ஏற்படுகிறது என்றால் அதற்கு உங்கள் ஃபிரிட்ஜில் உள்ள ஒரு பொருள் காரணமாக இருக்கலாம். கேட்கவே விசித்திரமாக இருக்கிறதா? ஆம், உண்மைதான். அது என்ன பொருள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

அடிக்கடி இறைச்சிகளில் காணப்படும் எஸ்சீரிசியா கோலை (ஈ. கோலை) என்ற பாக்டீரியா அடிக்கடி ஏற்படும் சிறுநீரக நோய் தொற்றுகளுடன் தொடர்பு கொண்டு உள்ளதாக ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1990 மற்றும் 2019க்கு இடைப்பட்ட வருடங்களில் மட்டும் சிறுநீரக நோய் தொற்றுகள் பரவுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 1990 இல் 25.2 கோடியாக இருந்த இந்த தொற்றுகளின் எண்ணிக்கை 2019ல் 40 கோடியாக அதிகரித்துள்ளது.

சிறுநீர் பாதை நோய் தொற்று ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?:
சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஏற்படுவதற்கான பொதுவான காரணம் சிறுநீர் பாதை வழியாக சிறுநீர் பைக்குள் நுழைந்து அங்கு வளரும் பாக்டீரியாக்கள் ஆகும். இந்த தொற்றுகளுக்கு முக்கியமான காரணமாக இருப்பது ஈ. கோலை என்ற பாக்டீரியா. இது பெரும்பாலும் விலங்குகளின் குடல் பகுதிகளில் வாழ்கின்றது. இது தவிர உடல் உறவு, மோசமான சுகாதாரம் மற்றும் குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகள் காரணமாகவும் சிறுநீரக நோய் தொற்றுகள் ஏற்படலாம்.

சிறுநீர் பாதை நோய் தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் என்ன ஆகும்?:

சிறுநீர் பாதை நோய் தொற்றுகளுக்கு கட்டாயமாக சிகிச்சை பெற்றுக் கொள்வது அவசியம். இல்லையெனில் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் வலியுடன் கூடிய சிறுநீர் வெளியேற்றம் ஆகியவை மிதமான சிறுநீரக நோய் தொற்றுக்கான அறிகுறிகள். மறுபுறம் இதற்கு சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக விட்டு விட்டால் இந்த தொற்றுகள் சிறுநீரகங்களுக்கு பரவி அதனால் மோசமான பிரச்சனைகள் உண்டாகும்.

சிறுநீரக தொற்றுகள் மற்றும் கெட்டுப்போன இறைச்சிகள்:

2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கெட்டுப்போன இறைச்சிகளில் காணப்படும் ஈ. கோலை என்ற பாக்டீரியா சிறுநீர் பாதை நோய் தொற்றுகள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணியாக அமைவதாக கண்டுபிடித்துள்ளது. மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக கடைகளில் விற்கப்படும் 30% முதல் 70% இறைச்சிகளில் ஈ. கோலை இருப்பதாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

எனவே, சிறுநீர் பாதை நோய் தொற்று ஏற்படுவதை தவிர்க்க நினைப்பவர்கள் போதுமான அளவு நீர்ச்சத்து எடுத்துக் கொள்வது அவசியம். மேலும் ஒருவர் சாப்பிடும் உணவு பாதுகாப்பானதாக இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். சுகாதாரமற்ற முறையில் சமைக்கப்பட்ட உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment