Search

இரவு உணவை சாப்பிட சரியான நேரம் எது தெரியுமா..? மருத்துவர் தரும் அறிவுரை..!

 நமது உணவுப் பழக்கத்தைப் பொறுத்தவரை “நேரம்தான் எல்லாமே” என்ற பழமொழி உண்மையாக இருக்கிறது. அன்றைய நாளின் கடைசி உணவை எப்போது சாப்பிடுவது என்பது ஒரு முக்கியமான முடிவாகும்.

சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பது ஏன் முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்ள உணவியல் நிபுணர் மற்றும் நீரிழிவு கல்வியாளரான கனிக்கா மல்ஹோத்ரா உதவுகிறா.

உங்களின் கடைசி உணவுக்கும் உறங்கும் நேரத்திற்கும் இடையில் ஏன் போதுமான இடைவெளி இருக்க வேண்டும்?

உடல்நலம், செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, உங்களின் கடைசி உணவுக்கும் உறங்கும் நேரத்துக்கும் இடையே போதுமான இடைவெளியை விட்டுவிடுவது மிகவும் முக்கியமானது. தூங்குவதற்கு முன் செரிமானத்திற்கு நேரத்தை அனுமதிப்பது ஏப்பம் அல்லது அஜீரணம் போன்ற அசௌகரியங்களைத் தவிர்க்க உதவுகிறது. ஏனெனில் சாப்பிட்டவுடன் உடனடியாக தூங்குவது இந்த பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி உங்கள் தூக்கத்தின் தரம் நிம்மதியை தொந்தரவு செய்யலாம் என மல்ஹோத்ரா விளக்குகிறார்.

உங்கள் கடைசி உணவுக்கும் காலை உணவுக்கும் (12 முதல் 14 மணிநேரம்) இடைப்பட்ட உண்ணாவிரத இடைவெளி வளர்சிதை மாற்ற செயல்முறைகளை ஊக்குவிக்கிறது மற்றும் கொழுப்பை எரிக்க உதவுகிறது. இது உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற வளர்சிதை மாற்ற நோய்களின் அபாயத்தைக் குறைத்து உடலை சரிசெய்யவும் புதுப்பிக்கவும் உதவுகிறது.

இரவில் தாமதமாக சாப்பிடுவது பசி மற்றும் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களின் சமநிலையை சீர்குலைக்கும். அதோடு கிரெலின் (பசி ஹார்மோன்) மற்றும் அடிபோனெக்டினை (குளுக்கோஸ் ஒழுங்குமுறைக்கு உதவுகிறது) ஆகியவற்றைக் குறைக்கும். இதன் விளைவாக பசியின்மை மற்றும் உடல் எடை அதிகரிக்கும். ஆரோக்கியத்தை மேம்படுத்த, உங்களின் கடைசி உணவை உறங்குவதற்கு குறைந்தது 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன்னதாகவே முடித்துவிடுவது நல்லது. இது உகந்த செரிமானத்தை உறுதி செய்து ஆரோக்கியமான வளர்சிதை மாற்றம், இருதய செயல்பாடு மற்றும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது.

நாளின் கடைசி உணவை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்?

உங்களின் கடைசி உணவிற்கான சிறந்த நேரம், அது இரவு உணவாக இருந்தாலும் அல்லது சிற்றுண்டியாக இருந்தாலும், பொதுவாக மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரைக்குள் சாப்பிடுவது நல்லது.

இரவு உணவு நேரம்:

உகந்த நேம்: மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை

காரணம்:  இந்த இடைவெளியில் இரவு உணவை உண்பது மேம்பட்ட செரிமானம் மற்றும் தூக்கத்தின் தரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆய்வுகளின்படி, இரவு உணவை இரவு 9:00 மணிக்கு முன் சாப்பிடுவது கொழுப்பு வளர்சிதை மாற்றத்தையும் ஒட்டுமொத்த ஆரோக்கிய விளைவுகளையும் மேம்படுத்தும். குறிப்பாக உடல் பருமன் மற்றும் டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது மிகவும் பயனளிக்கும்.

மாலை சிற்றுண்டி:

சிறந்த நேரம்: நீங்கள் சிற்றுண்டியை விரும்பினால், இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை சாப்பிடுவது சிறந்தது.

வழிகாட்டுதல்கள்: பழம், தயிர் அல்லது நட்ஸ் போன்ற இலகுவான, எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவைத் தேர்ந்தெடுக்கவும். உறங்கும் நேரத்துக்கு அருகில் அதிகமான அல்லது சர்க்கரை நிறைந்த தின்பண்டங்களைத் தவிர்க்கவும். ஏனெனில் அவை தூக்கத்தின் தரத்தில் சொந்தரவு செய்யலாம்.

உங்கள் உடல்நலம் மற்றும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த, இரவு உணவாக இருந்தாலும் சரி, சிற்றுண்டியாக இருந்தாலும் சரி, இரவு 9:00 மணிக்குள் உங்களின் கடைசி உணவை முடித்துவிட வேண்டும் என்று மல்ஹோத்ரா கூறுகிறார்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment