இரவு உணவுகளை தாமதமாக உட்கொள்வது உயர் கொலஸ்ட்ரால் அளவுகளுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உட்கார்ந்த வாழ்க்கை முறைகள், மோசமான உணவு முறைகள், உடல் பருமன், மனநலப் பிரச்சினைகள், மரபணு முன்கணிப்புகள் மற்றும் வழக்கமான உடல்நலப் பரிசோதனைகள் இல்லாததால் இளைஞர்களிடையே இதயம் தொடர்பான இறப்புகள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்த கல்வி, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆரம்பகால தலையீடுகள் மூலம் இந்த காரணிகளை நிவர்த்தி செய்வது இளைஞர்களின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
சமீபத்திய ஆண்டுகளில், இளைஞர்களிடையே இதயம் தொடர்பான இறப்புகள் கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருகின்றன, இது சுகாதார வல்லுநர்கள் மற்றும் பொது மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்து இதயநோய் நிபுணர் ஒருவர் விளக்கும் போது, ஆரோக்கியமான இளைஞர்களும் தற்போது இதயப் பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. சில அடிப்படைக் காரணங்கள் மற்றும் சாத்தியமான தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய கேள்விகளை நான் அதிகளவில் எதிர்கொள்கிறேன்.
News18
இந்த ஆபத்தான போக்குக்கு பங்களிக்கும் ஒரு முதன்மை காரணி வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம். இன்றைய அதிவேக உலகில், பல இளைஞர்கள் தங்களது வேலையிலும் சரி, மற்ற இடங்களிலும் சரி அதிக அளவில் உட்கார்ந்து கொள்ளும் வாழ்க்கை முறையையே கடைபிடிக்கிறார்கள். இதுபோன்று எப்போதும் உட்கார்ந்து கொண்டு இருப்பதும், மோசமான உணவுத் தேர்வுகளும் இதய பிரச்சனைக்கு காரணமாகிறது. குறிப்பாக சர்க்கரைகள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் சோடியம் நிறைந்த அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது போன்றவை இதய பிரச்சனைகளை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகிறது.
மோசமான வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களின் நேரடி விளைவாக இளைஞர்கள் அதிகம் எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்சனை உடல் பருமன். அதிக உடல் எடை, உயர் இரத்த அழுத்தம் , டைப் 2 நீரிழிவு மற்றும் உயர் கொழுப்புகளை உருவாக்கும் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது. இது இதய ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிப்பதால் இதய நோய் பிரச்சனைக்கு வழி வகுக்கும். கூடுதலாக, நவீன முறையில் தயாரிக்கப்படும் உணவில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பெரும்பாலும் இல்லை, இதுவே ஆபத்தை மேலும் அதிகரிக்கிறது.
மற்றொரு முக்கியமான காரணி இளைஞர்களிடையே அதிகரித்து வரும் மனநலப் பிரச்சனைகள் ஆகும். நாள்பட்ட மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஆகியவை இதய ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மன அழுத்தம் கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்களின் வெளியீட்டிற்கு வழிவகுக்கிறது, இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம் மற்றும் புகைபிடித்தல் அல்லது அதிகப்படியான மது அருந்துதல் போன்ற ஆரோக்கியமற்ற வழிமுறைகளுக்கு பங்களிக்கும். இந்த பழக்கங்கள் இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு, தீவிரமான இதய நோய்களுக்கும் வழிவகுக்கும்.
இரவு உணவுகளை தாமதமாக உட்கொள்வது உயர் கொலஸ்ட்ரால் அளவுகளுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இளைஞர்களின் ஆரோக்கியத்தில் மரபணு முன்கணிப்புகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மரபியல் மட்டுமே நேரடியாக இதய நோயை ஏற்படுத்தாது என்றாலும், சிறு வயதிலிருந்தே அதிக கொலஸ்ட்ரால் அளவை ஏற்படுத்தும் குடும்ப ஹைபர்கொலஸ்டிரோலீமியா போன்ற நிலைமைகளுக்கு இளைஞர்கள் தள்ளப்படலாம்.
இத்தகைய மரபணு நிலைமைகளை முன்கூட்டியே கண்டறிவது மற்றும் நிர்வகிப்பது மிகவும் முக்கியமானது. இருப்பினும் கடுமையான உடல்நலப் பிரச்சனைகள் வரும் வரை அவற்றை அடையாளம் காண்பது பெரும்பாலும் அரிதானது.
இளைஞர்களிடையே வழக்கமான சுகாதார பரிசோதனைகள் இல்லாததும் மற்றொரு குறிப்பிடத்தக்க காரணியாகும். பல இளைஞர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை, இது கண்டறியப்படாத பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இதனை ஆரம்பத்தில் கண்டறியும் பட்சத்தில் அதன் தாக்கத்தை படிப்படியாக குறைக்க முடியும். வழக்கமான பரிசோதனைகள் ஆபத்தான காரணிகள் மற்றும் நிலைமைகள் மிகவும் கடுமையான செல்வதற்கு முன்பாக அவற்றைக் கண்டறிய உதவும்.
முடிவாக, இளைஞர்களிடையே அதிகரித்து வரும் இதயப் பிரச்சனைகள், வாழ்க்கைமுறைக் காரணிகள், மனநலச் சவால்கள், மரபணு முன்கணிப்புகள் மற்றும் வழக்கமான உடல்நலக் கண்காணிப்பு இல்லாமை போன்றவற்றால் பாதிக்கப்படும் ஒரு சிக்கலான பிரச்சனையாகும்.சிறுவயதிலிருந்தே இதய ஆரோக்கியத்தை பராமரிக்க இதுகுறித்த கல்வி கற்பிப்பது, இதய பிரச்சனைளை தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு வாதிடுவது மற்றும் சுகாதார சூழலை உருவாக்குவதற்கான வேலையை மேற்கொள்வது இதயநோய் நிபுணர்களான எங்களது பொறுப்பு.
இந்த காரணிகளை நிவர்த்தி செய்வதன் மூலம், இதயம் தொடர்பான இறப்புகளின் நிகழ்வைக் குறைக்கவும், இளைய தலைமுறையினருக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை மேம்படுத்தவும் உதவலாம்.
0 Comments:
Post a Comment