Search

யூரிக் ஆசிட் இருக்கவங்க தக்காளி தொடவே கூடாது..! ஏன் தெரியுமா..?

 

தக்காளியில் தீங்கு விளைவிக்கும் சில பண்புகளும் இருப்பதாக தெரிவித்துள்ள ஊட்டச்சத்து நிபுணர் அவ்னி கவுல் தக்காளியை யார் யார் தவிர்ப்பது நல்லது என்பது குறித்து விளக்கி இருக்கிறார்.

தக்காளி என்பது மக்கள் தங்களது சமையிலில் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு பொருளாகும். தக்காளி சில உணவில் சுவையை கூட்டுவதற்கும் பயன்படுகிறது. அதே நேரத்தில் தக்காளியில் சில தீங்கு விளைவிக்கும் பண்புகளும் அடங்கியிருக்கிறது. பெரும்பாலும் இதுபற்றி அனைவருக்கும் தெரியாது. எனவே தக்காளியின் நன்மைகள் மற்றும் தீமைகளை இங்கே விரிவாக பார்க்கலாம்.

தக்காளியில் இருக்கும் சில நன்மை பயக்கும் பண்புகள், இரத்த சோகை, ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்களுக்கு தக்காளி பயனுள்ளதாக இருக்கிறது. உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பவர்கள் தக்காளியை பாதுகாப்பாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

தக்காளியில் வைட்டமின் சி, லைகோபீன் மற்றும் நார்ச்சத்து உள்ளிட்ட பல நன்மைகள் அடங்கி இருக்கிறது. இத்தகைய நன்மைகளால், தக்காளி புற்றுநோய் எதிர்ப்பு சக்தியாகவும் செயல்படுகிறது.

தக்காளியை அதிகமாக உட்கொள்வது பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும், இது உங்கள் மூளையின் ஒரு பகுதிக்கு இரத்த ஓட்டம் துண்டிக்கப்படும் போது ஏற்படுகிறது. மேலும் இது வீக்கத்தைக் குறைக்கலாம், உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கலாம் மற்றும் இரத்தம் உறைவதைத் தடுக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


News18

தக்காளி சாறு சூரிய ஒளி மற்றும் பிற தோல் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கிறது, இந்த மூலப்பொருள் அழகுசாதனப் பொருட்களில் ஒரு அஸ்ட்ரிஜென்டாக செயல்படுகிறது, தோல்களில் ஏற்படும் திறந்த துளைகளின் சிக்கலைக் குறைத்து, சருமத்தை இறுக்கமாக வைத்திருக்க இது உதவுகிறது.

எனினும், தக்காளியில் தீங்கு விளைவிக்கும் சில பண்புகளும் இருப்பதாக தெரிவித்துள்ள ஊட்டச்சத்து நிபுணர் அவ்னி கவுல் தக்காளியை யார் யார் தவிர்ப்பது நல்லது என்பது குறித்து விளக்கி இருக்கிறார். இரத்தத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளவர்கள் தக்காளியை தவிர்க்க வேண்டும்.

யூரிக் ஆசிட் பிரச்சனை இருந்தாலும், தக்காளியை உணவில் குறைவாக சேர்த்துக் கொள்வது நல்லது, கடுமையான நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் தக்காளியை சாப்பிடவே கூடாது.

தக்காளி இரைப்பையில் அதிக அமிலத்தை உற்பத்தி செய்யும், இது நெஞ்செரிச்சல் மற்றும் அசௌகரியத்திற்கு வழிவகுக்கும்.

தக்காளியில் அழற்சி பண்புகள் பெரும்பாலும் கிடையாது என்றாலும், தோல் எரிச்சல், வீக்கம், மூக்கு ஒழுகுதல் மற்றும் வயிற்று வலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம்.

தக்காளி விதைகளில் ஆக்சலேட் இருப்பதால், அதிக அளவு தக்காளி சாப்பிடுவதால் சிறுநீரக கற்கள் உருவாகலாம், எனவே இது சிறுநீரக கல் உருவாவதற்கு பங்களிக்கிறது.

தக்காளியில் பிரக்டோஸ் அதிகமாக உள்ளது, இது சிலருக்கு ஹிஸ்டமைன் எதிர்வினைகளைத் தூண்டும்.

தக்காளியில் சோலனைன் என்ற அல்கலாய்டு உள்ளது, இது மூட்டு வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். இந்த அல்கலாய்டு, கால்சியம் திசுக்களில் குவிந்து மூட்டுகள் வீக்கமடையும் போது இது நிகழலாம்.தக்காளியை அதிகமாக உட்கொள்வது நச்சுத்தன்மையை ஏற்படுத்தலாம், இது தொண்டை மற்றும் வாய் எரிச்சல், தலைச்சுற்றல் உள்ளிட்டவற்றிற்கு வழிவகுக்கும்.




Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment