19.09.2024 முதல் 27.09.2024 வரை காலாண்டுத்தேர்வுகள் நடைபெற்றது . தேர்வுகளின் விடைத்தாட்களை திருத்தங்கள் மேற்கொண்டு 07.10.2024 அன்று மாணவர்களுக்கு விடைத்தாட்களை வழங்க தெரிவிக்கப்பட்டுருந்தது . இத்தேர்வின் விடைத்தாட்களை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் வழிக்காட்டுதலின் படி சரியாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதனை ஆய்வு மேற்கொள்ள கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆய்வு குழுவினர் 09.10.2024 ( புதன்கிழமை ) மற்றும் 10.10.2024 ( வியாழக்கிழமை ) ஆகிய நாட்களில் பள்ளிகளுக்கு வருகை தந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
ஆய்வு குழுவினர் பள்ளிகளுக்கு வருகை தரும் பொழுது சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பினை அளிக்குமாறு அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment