Search

IIT Chenai-ல் விமான பாதுகாப்பு தொழில்நுட்ப படிப்பு

 

சென்னை ஐ.ஐ.டி., பிரவர்தக், பிரெஞ்சு பல்கலையுடன் இணைந்து, ஏவியேஷன் சேப்டி மேனேஜ்மென்ட் என்ற, விமான பாதுகாப்பு தொடர்பான படிப்பை அறிமுகம் செய்துள்ளது.

இரண்டாண்டு கால படிப்பான இதில், மாதம் ஐந்து நாட்கள் நேர்முக விளக்கங்களுடனும், மற்ற நாட்கள் இணைய வழியிலும் கற்பிக்கப்படும். இதில், அரசு, தனியார் விமான நிறுவனங்களில் பணியாற்றும் வல்லுனர்கள் பங்கேற்கலாம்.

இதுவரை, விமான துறை நிபுனர்கள், பிரான்ஸ் சென்று, 12 லட்சம் ரூபாய்க்கு மேல் கல்விக் கட்டணம் செலுத்தி, இந்த படிப்பை படித்த நிலையில், தற்போது, சென்னை ஐ.ஐ.டி.,யின் முயற்சியால், டில்லியிலேயே படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

மேலும், கட்டணம் பாதியாவதுடன், நேர்முக வகுப்புகள் தவிர, மற்ற வகுப்புகளை பணியில் இருந்தபடியே அணுக முடியும்.

அடுத்தாண்டு ஜனவரியில், 30 நபர்களுடன் துவங்கும் இந்த படிப்புக்கு, டிசம்பர், 15க்குள், https://digitalskills. iitmpravartak.org.in/course_details.php?courseID=285&cart என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, dsa@iitmpravartak.net என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி கூறுகையில், 70 ஆண்டு அனுபவம் உள்ள பிரெஞ்சு பல்கலையின் இ.என்.ஏ.சி.,யுடன் இணைந்து, பயணியர் விமான பாதுகாப்பில், தொழில்நுட்ப சவால்களை கையாளும் புதிய கல்வியை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம், என்றார்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

0 Comments:

Post a Comment