இந்தியா மிகப்பெரிய அறிவுச் சந்தைகளில் ஒன்றாக இருக்கும், என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன சேர்மன் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
மும்பையில், என்விடியா ஏ.ஐ., மாநாடு-2024 இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி மற்றும்என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி கூறுகையில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தில், இந்தியா மிகப்பெரிய அறிவுச் சந்தைகளில் ஒன்றாக இருக்கும். நமது பிரதமர் கூறியது போல் இது புதிய லட்சிய இந்தியாவில், 140 கோடி இந்தியர்கள் இருக்கிறார்கள். சராசரி வயது 35க்குக் கீழே உள்ளவர்கள் இங்கு அதிகமாக இருக்கிறார்கள்.
இந்தியாவை முதன்மையான டிஜிட்டல் சமூகமாக மாற்றியதில் பிரதமர் தலைமை முக்கியமானது.
இந்தியாவின் வலுவான டிஜிட்டல் உள்கட்டமைப்பு, நம்மிடம் இருப்பது நமக்கு பெரிய அதிர்ஷ்டம் . அமெரிக்கா மற்றும் சீனாவைத் தவிர, இந்தியா சிறந்த டிஜிட்டல் இணைப்பு உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
இவ்வாறு அம்பானி கூறினார்.
என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் கூறியதாவது:
இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திறன்களை வலுப்படுத்தவும் நாட்டில் அதிநவீன ஏ.ஐ., உள்கட்டமைப்பை அமைக்கவும் ரிலையன்ஸ் மற்றும் என்விடியா இடையே ஒப்பந்தம் செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment