Youth Skill Development -"PM Intern' எனும் புதிய திட்டத்தை மத்திய அரசு துவக்கியுள்ளது. - Agri Info

Adding Green to your Life

October 25, 2024

Youth Skill Development -"PM Intern' எனும் புதிய திட்டத்தை மத்திய அரசு துவக்கியுள்ளது.

 


இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் நிதி உதவி வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, 'பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப்' எனும் புதிய திட்டத்தை மத்திய அரசு துவக்கியுள்ளது.

முக்கியத்துவம்

நாட்டின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 742 மாவட்டங்களில் ரூ. 800 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 25 துறைகளை சேர்ந்த, நாட்டின் சிறந்த 500 தொழில் நிறுவனங்களில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 'இன்டர்ன்ஷிப்' வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.

பயிற்சி துறைகள்

தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் மேம்பாடு, வங்கி மற்றும் நிதி சேவைகள், எண்ணெய், எரிவாயு மற்றும் ஆற்றல், உலோகங்கள் மற்றும் சுரங்கம், எப்.எம்.சி.ஜி., தொலைத்தொடர்பு, உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானம், சில்லறை விற்பனை மற்றும் நுகர்வோர் பொருட்கள், சிமெண்ட் மற்றும் கட்டிட பொருட்கள், வாகனம், மருந்து, விமானம் மற்றும் பாதுகாப்பு, சுகாதாரம், உற்பத்தி மற்றும் தொழில்துறை, ரசாயனம், ஊடகம், பொழுதுபோக்கு மற்றும் கல்வி, விவசாயம், ஆலோசனை சேவைகள், ஜவுளி உற்பத்தி, கற்கள் மற்றும் நகைகள், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் உட்பட பல்வேறு துறைகளில் இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்கப்படுகிறது.

பயிற்சி காலம்:

ஓர் ஆண்டு

நிதி உதவி:

பயிற்சியாளருக்கு நிதி உதவியாக மாதம் ரூ.5,000 வீதம் 12 மாதங்களுக்கு வழங்கப்படுவதோடு, ஒருமுறை மானியமாக ரூ.6,000 வழங்கப்படுகிறது. காப்பீடு வசதியும் உண்டு.

தகுதிகள்:


* இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
* 21-24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
* தற்போது முழுநேர பணி அல்லது முழுநேர கல்வி பெறுபவராக இருத்தல் கூடாது.
* ஆன்லைன் அல்லது தொலைநிலைக் கல்வி திட்டங்களில் பதிவுசெய்யப்பட்ட மாணவர்கள் தகுதியுடையவர்கள்.
* குறைந்தது மேல்நிலை கல்வி, நிறைவு செய்திருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான ஐ.டி.ஐ., படிப்பை முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ அல்லது பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.சி.ஏ., பி.பி.ஏ., பி.பார்மா போன்ற பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விபரங்களுக்கு:
https://pminternship.mca.gov.in/


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

No comments:

Post a Comment