உங்கள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் 10 வாழ்க்கை முறை தவறுகள் - இனியும் இதை செய்யாதீர்கள்! - Agri Info

Adding Green to your Life

November 3, 2024

உங்கள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் 10 வாழ்க்கை முறை தவறுகள் - இனியும் இதை செய்யாதீர்கள்!

 ஒவ்வொருவரும் தங்களது உடலை கோயிலைப் போல பேணிக் காக்க வேண்டும். நீங்கள் உங்கள் உடலை மோசமாக நடத்தினால், அது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் குறிப்பாக உங்கள் உடற்தகுதியை பாதிக்கும். உங்கள் உடல், உடற்பயிற்சி, நீங்கள் உண்ணும் உணவு வகை அல்லது நீங்கள் செய்யும் செயல்பாடுகள் மற்றும் நீங்கள் பின்பற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றுடன் நேரடியாக தொடர்புடையது.

எனவே வாழ்க்கை முறை தவறுகள் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உங்கள் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்று கூறுகிறார்கள். எனவே, உங்கள் உடல் ஆரோக்கியத்தையும், உடற்தகுதியையும் கெடுக்கும் தீய பழக்கங்களை அறிந்து, அதனை பாதுகாப்பாக வைத்திருப்பது சிறந்தது.

தவிர்க்க வேண்டிய 10 கெட்ட பழக்கங்கள்..

உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பும் பட்சத்தில், கீழே கொடுக்கப்பட்டுள்ள 10 தவறுகளை தவிர்ப்பது நல்லது..

  1. மோசமான தோரணை: நீங்கள் மோசமான தோரணையில் உட்கார்வது, இரண்டு முக்கியமான விஷயங்களைக் குறிக்கிறது. முதலாவது, உங்கள் தசைகள் பலவீனமாக இருப்பதைக் குறிக்கிறது. இரண்டாவது, உங்களுக்கு முதுகுவலி மற்றும் பிற சிக்கல்கள் ஏற்படுவதைக் காட்டுகிறது. உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், உடற்தகுதிக்கும் சரியான தோரணையில் உட்கார்வது மிகவும் முக்கியம். தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் உங்கள் தசைகள் வலிமை பெறும் மற்றும் நல்ல தோரணையை எளிதாக பராமரிக்க உதவும்.

  2. காலை உணவைத் தவிர்ப்பது: காலை உணவை ஒருபோதும் தவிர்க்காதீர்கள், இது அன்றைய நாளுக்கான மிக முக்கியமான உணவாகும், எனவே காலை உணவு எடுத்துக் கொள்ளாமல் இருந்தால், நாள் முழுவதும் உங்களுக்கு ஆற்றல் குறைவாக இருக்கலாம். நீங்கள் சோர்வாகவும் உணரலாம்.

  3. அதிகமாக போன்களைப் பயன்படுத்துதல்: அதிக திரை நேரம் உங்கள் கண்களுக்கும், உங்கள் தூக்க ஆரோக்கியத்திற்கும் மற்றும் உங்கள் சருமத்திற்கும் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இது மன அழுத்தத்திற்கும் காரணமாகிறது.

  4. அதிகப்படியான காஃபி: அதிகப்படியாக காஃபி குடித்தல் நீரிழப்பு, நடுக்கம் மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கும்.

  5. மோசமான தூக்க பழக்கம்: தவறான நேரத்தில் தூங்குவதும், விழிப்பதும் உங்கள் உடலுக்கு மிகவும் மோசமான விளைவுகளை தரும். ஏனெனில் இது உங்கள் தூக்க சுழற்சி, உங்கள் சர்க்காடியன் ரிதம், உங்கள் ஹார்மோன்கள் மற்றும் தூக்கம் தொடர்பான மற்ற பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.

  6. லேட் நைட் ஸ்நாக்கிங்: ஆரோக்கியமற்ற உணவுகளை தாமதமாக சாப்பிடுவது எடை அதிகரிப்பு, உடல் பருமன் மற்றும் இறுதியில் இதய பிரச்சனைகள் அல்லது நீரிழிவு நோய்க்கு காரணமாகும்.

  7. உடற்பயிற்சியை தவிர்த்தல்: உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி, தசைகள் மற்றும் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கவும், நோய்களைத் தவிர்க்கவும், உங்கள் ஆயுளை அதிகரிக்கவும் உடற்பயிற்சி மிகவும் முக்கியமான ஒன்று.

  8. மோசமான நீரேற்றம்: போதுமான தண்ணீர் குடிக்காமல் இருந்தால், நீங்கள் சோர்வாகவும், ஆற்றல் குறைவாகவும் இருப்பதை உணரலாம்.

  9. மன அழுத்தம்: மன அழுத்தம் உங்கள் ஆற்றலை பாதிப்பதோடு, உங்கள் உந்து சக்தியையும் பாதிக்கிறது. மேலும் இது இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிற உடல் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.

  10. ஜங்க் ஃபுட் சாப்பிடுவது: ஜங்க் ஃபுட் உடல் பருமன், மோசமான இதய ஆரோக்கியம், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் நீங்கள் விரும்பாத பிற நாள்பட்ட நோய்களுடன் நேரடியாக தொடர்புடையது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment