நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சிறப்பாக இருக்க ஒமேகா -6 மற்றும் ஒமேகா -3 ஃபேட்டி ஆசிட்ஸ் அதிக அளவில் உள்ள உணவுகள் அவசியம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதை தவிர, இந்த ஃபேட்டி ஆசிட்ஸ் பல வகையான புற்றுநோய்களுக்கு எதிரான பாதுகாப்பை வழங்குவதாகவும் கூறப்பட்டு உள்ளது.
ஜார்ஜியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு சுமார் 2,50,000 பேரிடம் 10 ஆண்டுகளாக ஆய்வு செய்த பிறகு ரத்தத்தில் உள்ள ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 ஆகியவை குறிப்பிட்ட 19 வகை புற்றுநோய்கள் உருவாகும் அபாயத்தை கணிசமாக குறைக்க உதவுவது கண்டறியப்பட்டுள்ளது.
“ஆரோக்கியமான கொழுப்புகள் (healthy fats) " என்று அழைக்கப்படும் ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 ஃபேட்டி ஆசிட்ஸ் நம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க அவசியமானவை. கொழுப்பு நிறைந்த மீன்கள் (ஃபேட்டி ஃபிஷ்), நட்ஸ், அவகேடோ மற்றும் கனோலா ஆயில் போன்ற சில தாவர எண்ணெய்களிலும் இந்த கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
ஆய்வின் போது இதில் பங்கேற்று இருந்த சுமார் 30,000 பேர் ஏதேனும் ஒரு வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். அதே போல முக்கியமாக அதிக அளவு கொழுப்பு அமிலங்களினால் கிடைத்த நன்மைகள் என்பது பிஎம்ஐ, மது அருந்துதல் அல்லது உடல் செயல்பாடு இல்லாமல் இருப்பது போன்ற பிற ஆபத்து காரணிகளை சார்ந்திருக்கவில்லை என்பதையும் இந்த ஆய்வு வெளிப்படுத்தி இருக்கிறது. அதாவது மேற்கண்ட எதிர்மறை விஷயங்கள் இருந்தாலும் கூட ஆரோக்கியமான கொழுப்புகள் புற்றுநோய்க்கு எதிராக ஒரு பாதுகாப்பு தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வு கண்டறிந்துள்ளது.
மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்ஸ் எடுத்து கொள்வது உடலில் இந்த ஆரோக்கியமான கொழுப்புகளை அதிகரிக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்தனர், ஆனால் எல்லோருக்கும் இது பொருந்தாது என்றும் குறிப்பிட்டு உள்ளனர். அதிக அளவு ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 எடுத்து கொள்வது குறைவான கேன்சர் அபாயத்துடன் தொடர்புடையதாக யுஜிஏவின் பொது சுகாதாரக் கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றவரும், ஆய்வின் முதன்மை ஆசிரியருமான யுசென் ஜாங் கூறினார்.
எனினும் தற்போதைய ஆய்வில் ஒமேகா -3 அதிக அளவு இருப்பது ப்ரோஸ்டேட் புற்றுநோயின் சற்றே அதிக ஆபத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அதிக அளவு ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களை ஒருவர் கொண்டிருப்பதில் சில குறைபாடுகள் உள்ளன.
ஒமேகா -3 அதிகம் இருப்பது ஆண்களுக்கு ப்ரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை ஏற்படுத்த கூடும் என்று ஆய்வாளர்கள் கூறி இருக்கிறார்கள். பெண்களைப் பொறுத்தவரை ஒமேகா 3-ஐ அதிகம் சாப்பிடுங்கள்” என்று ஆய்வின் மற்றொரு ஆசிரியரும் யுஜிஏவின் பிராங்க்ளின் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இணை பேராசிரியருமான கைசியோங் யே கூறினார்.
0 Comments:
Post a Comment