எடை குறைக்கும் முயற்ச்சியில் உங்கள் உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்க போராடுகிறீர்களா? அப்படி என்றால் குறிப்பாக காலை உணவுக்கு உங்கள் டயட்டில் என்ன சேர்த்து கொள்கிறீர்கள் மற்றும் சாப்பிடுகிறீர்கள் என்பதை சற்று கவனித்து பாருங்கள்.
கொழுப்பை குறைக்க போராடுகிறீர்கள் என்றால் காலை நேரத்தில் 30 கிராமுக்கு குறைவான புரதம் போதுமானதாக இருக்காது என்கிறார்கள் உடற்பயிற்சி நிபுணர்கள். பிரபல உடற்பயிற்சி பயிற்சியாளர் சேஸ் சேம்பர்ஸ் “2 முட்டைகள் அதிக ப்ரோட்டீன் கொண்ட காலை உணவு அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.
2 முட்டைகள் + 1 கப் முட்டை வெள்ளைக்கரு (அல்லது) *2 முட்டைகள் + 2 சிக்கன் சாசேஜஸ் (அல்லது) *2 முட்டை + 2 கிரீக் யோகர்ட் இந்த மூன்றில் ஒன்று அதிக புரதம் கொண்ட காலை உணவாகும் என்கிறார். சுருக்கமாக சொன்னால் “30 கிராமுக்கு குறைவான புரதம் இருந்தால், அது அதிக புரதம் கொண்ட காலை உணவு அல்ல” என்று சேம்பர்ஸ் கூறுகிறார். மேலும் புரிந்து கொள்ள, மும்பையில் உள்ள ஜினோவா ஷால்பி மருத்துவமனையின் உணவியல் நிபுணரான ஜினல் படேல் கூறி உள்ள கருத்துக்களை பார்க்கலாம்.
ப்ரோட்டீன் நிறைந்த காலை உணவோடு ஒரு நாளை துவக்குவது அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. காலை நேரத்தில் போதுமான அளவு ப்ரோட்டீன் சேர்த்து கொள்வது ரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த மற்றும் கவனத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. அதுபோல அதிகாலையில் போதுமான அளவு ப்ரோட்டீனை உண்பவர்கள், அன்றைய நாளின் அடுத்தடுத்த உணவு தேர்வுகளில் ஆரோக்கியமானவற்றை சேர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் மற்றும் அதிக சர்க்கரை கொண்ட தின்பண்டங்களுக்கான பசியை நிர்வகிக்க முடியும் என்கிறார் ஜினல் படேல்.
சேஸ் சேம்பர்ஸின் கருத்தை சரி என்று ஒப்பு கொண்ட படேல், கிரீக் யோகர்ட், முட்டை அல்லது பருப்புகள் சாப்பிடுவது வயிறு நிறைந்த முழுமை உணர்வை ஊக்குவிப்பதன் மூலம் பசியை நிர்வகிக்க உதவுகிறது என்று கூறினார். அதிக ப்ரோட்டீன் கொண்டிருக்கும் காலை உணவைப் பொறுத்தவரை, 30 கிராமுக்கு மேல் இருக்க வேண்டும் என்றாலும், சிறிதளவு ப்ரோட்டீன் கன்டென்ட் கொண்ட எந்த உணவும் போதுமானது என்றும் ஒருபக்கம் நம்பப்படுகிறது என்றும் படேல் கூறுகிறார்.
ஆனால் வளர்சிதை மாற்ற செயல்பாட்டில் ப்ரோட்டீன் முக்கிய பங்கு வகிக்கிறது, தவிர காலை உணவில் 30 கிராமுக்கு குறைவாக ப்ரோட்டீன் இருந்தால், உடற்பயிற்சியில் ஈடுபட்டபின்னர் அல்லது தூக்கத்திற்கு பிறகு உடலின் உகந்த செயல்திறனை பெற மற்றும் ரெக்கவரிக்கு போதுமான ஆற்றலை வழங்காது என்றும் படேல் குறிப்பிட்டார். எனவே காலை உணவில் குறைந்தது 40 - 50 கிராம் அளவில் ப்ரோட்டீன் சேர்த்துக் கொள்வது நல்லது.
தனிநபர்கள் தங்களின் காலை உணவுக்கு ஏற்ற புரத அளவு குறித்து நிபுணரிடம் ஆலோசனை பெறுவதும் அவசியம் என்றார். எக்காரணம் கொண்டும் யாரும் காலை உணவை தவிர்க்க வேண்டாம். காலை நேரத்தில் சேர்த்து கொள்ள ஏற்ற புரதச்சத்து அதிகம் உள்ள சரியான உணவுகளை பற்றி நிபுணரிடம் ஆலோசித்து உங்கள் டயட்டை திட்டமிடுவது பயனுள்ளதாக இருக்கும் என்று அறிவுறுத்தினார்.
0 Comments:
Post a Comment