இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு விழா - பள்ளிகளில் போட்டிகள் நடத்த உத்தரவு! - Agri Info

Adding Green to your Life

November 24, 2024

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு விழா - பள்ளிகளில் போட்டிகள் நடத்த உத்தரவு!

 

IMG_20241124_163157

மக்களாட்சித் தத்துவத்தின் உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் ஓர் உன்னத உருவாக்கம் , அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும் . இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75 - வது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் வரும் 26.11.2024 நாளன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும் , மாண்பமை உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள் , அனைத்து சார்நிலை அரசு அலுவலகங்கள் , மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள் தன்னாட்சி அதிகார அமைப்புகள் , நிறுவனங்கள் , தன்னாட்சி அரசு நிறுவனங்கள் , அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டு , அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 மேலும் , பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச்சுப் போட்டிகள் / கருத்தரங்குகள் / வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்தவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

Press Release - Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

No comments:

Post a Comment