Search

காலை உணவை தாமதமாக உட்கொள்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படுமா..? மருத்துவர் பதில்..!

 ஒரு நபர் உட்கொள்ளும் சத்துமிகுந்த காலை உணவு தான் அன்றைய நாள் முழுக்க அவர் இயங்குவதற்கு உண்டான சக்தியை கொடுத்து உடல் இயக்கத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. டிஜிட்டல் கிரியேட்டாரான டாக்டர் ஸ்டீபன் கென்றி தன்னுடைய சமீபத்திய போட்கேஸ்ட் ஒன்றில் காலை உணவை, காலை 10-11 மணி வரை தாமதம் செய்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என வித்தியாசமான ஒரு தகவலை குறிப்பிட்டார்.

ஒரு நாளில் கடைசி உணவிற்கும் அடுத்த நாளின் முதல் உணவிற்கும் இடையே எந்த அளவிற்கு கால இடைவெளி உள்ளதோ அந்த அளவிற்கு உடலின் வளர்ச்சிதை மாற்றம் மேம்படுவதோடு உடல் ஆரோக்கியம் அதிகரிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதைப் பற்றி பல்வேறு வல்லுநர்களிடம் கேட்டறிந்து அவர்கள் கொடுத்த தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

மும்பை திருபாய் அம்பானி மருத்துவமனையில் ஊட்டச்சத்து நிபுணராக பணிபுரியும் பிரதிக்ஷா காடம் என்பவர் கூறுகையில், ஒரு விரதம் போல, காலை உணவை உட்கொள்வதை தாமதப்படுத்துவது உண்மையிலேயே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக காலை 10-11 மணி வரை காலை உணவை உட்கொள்ளும் நேரத்தை தள்ளிப் போடுவது உடலில் அதிகப்படியான கொழுப்புகளை கரைக்கிறது. இன்சுலின் உணர்திறனையும் அதிகரிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

News18

இதன் மூலம் நமது உடல் ஆனது ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டுள்ள சக்திகளை பயன்படுத்த தொடங்கிவிடும். இது நபருக்கு நபர் அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்கள், வளர்ச்சிதை மாற்றம் ஆகியவற்றை பொருத்து மாறுபடலாம் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூரில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் தலைமை ஊட்டச்சத்து நிபுணரான ரிங்கி குமாரி, மேற்கூறிய கருத்தை ஆதரித்துள்ளார். காலை உணவு உட்கொள்வதை ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரங்கள் தள்ளிப் போடுவது பல்வேறு நன்மைகளை அளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு உணவை உட்கொள்வது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதோடு, உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தாமதமாக காலை உணவை உட்கொள்வதால் மனநிலை தெளிவாக இருக்கும் எனவும் அவர் புதியதொரு கருத்தை கூறியுள்ளார். உணவு உட்கொள்ளும் நேரமானது ஒருவரின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ஹார்மோன் செயல்பாடுகளை மாற்றத்தில் ஏற்படுத்தும் என்றாலும், தான் உட்கொள்ளும் உணவில் ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் மற்றும் அவரின் உணவு பழக்க வழக்கம் ஆகியவற்றை பொருத்து இது நபருக்கு நபர் மாறுபடலாம் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.

சராசரியாக ஒரு மனிதர் காலை 8-10 மணிக்குள் காலை உணவை உட்கொள்கிறோம். இதையே 10-11 மணி வரை தள்ளி போடும்போது இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் குறைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலே கூறிய கருத்துக்களின் படி பார்க்கையில் காலை உணவு உட்கொள்வதற்கு என குறிப்பிட்ட நேரம் எது என்ற கேள்வி எழாமல் இல்லை. உண்மையிலேயே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாம் காலை உணவை உட்கொள்ள வேண்டும் என்பதும், காலை உணவை தாமதப்படுத்த வேண்டும் என்பதும் அனைவருக்கும் பொருந்தாது. தனிப்பட்ட நபரின் வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கங்கள் போன்றவை இதில் முக்கிய காரணிகளாக செயல்படுகின்றன.

தரவுகளின் அடிப்படையில் பார்க்கையில் காலையில் கண்விழித்ததில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு முன்பாக காலை உணவு உட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள். மேலும் சிலரோ காலை உணவை தாமதப்படுத்துவது நல்லது என்றும் கூறுகின்றனர். உண்மையில் மேலே கூறிய இரண்டையும் செயல்படுத்தி பார்த்து மற்றும் உங்கள் உடலுக்கு எது ஏற்றது என்பதை கண்டறிந்து அதனை பின்பற்ற வேண்டும் என குமாரி கூறியுள்ளார்.

உண்மையிலேயே நீங்கள் எந்த நேரத்திற்கு உணவு உட்கொள்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியமானதாக ஒன்றான இருந்தாலும், அந்த உணவில் ஊட்டச்சத்துக்கள், தானியங்கள், புரத சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கிய உணவாக அது இருக்க வேண்டும் என்பது அதைவிட முக்கியம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இவ்வாறு தாமதமாக உணவு உர்கொல்வது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதோடு, மனநிலையை சீராக வைக்கும் உதவுவதாகவும் தெரிவித்துள்ளார்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment