ஜனவரி 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!! ” வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆட்சியர் அதிரடி உத்தரவு”..!
அந்த வகையில், திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் கோவிலில் வரும் ஜனவரி 10ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஜனவரி 25ம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து, திருச்சியில் உள்ளூர் விடுமுறை அறிவித்த நாளில் பள்ளி, கல்லூரிகளுக்கு தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தால், அப்பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.