ஜனவரி 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!! ” வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆட்சியர் உத்தரவு”..! - Agri Info

Adding Green to your Life

December 31, 2024

ஜனவரி 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!! ” வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆட்சியர் உத்தரவு”..!

 

ஜனவரி 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!! ” வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆட்சியர் அதிரடி உத்தரவு”..!

தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதில், மார்கழி மாதம் திருமாலுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. மேலும், இந்த மாதத்தில்  பெண்கள் அதிகாலையில் எழுந்து விளக்கேற்றி திருப்பாவை, திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளி எழுச்சி போன்ற பாடல்களை பாராயணம் செய்து திருமாலையும் ஆண்டாளையும் வழிபடுகிறார்கள். மேலும், இந்த மாதத்தில் தான் வைகுண்ட  ஏகாதசி வருகிறது.

அந்த வகையில், திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் கோவிலில் வரும் ஜனவரி 10ம் தேதி  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஜனவரி 25ம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து, திருச்சியில் உள்ளூர் விடுமுறை அறிவித்த நாளில் பள்ளி, கல்லூரிகளுக்கு தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தால், அப்பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment