மதுரையில் டிசம்பர் 14 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - Agri Info

Adding Green to your Life

December 7, 2024

மதுரையில் டிசம்பர் 14 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

 

மதுரையில் டிசம்பர் 14 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10.000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.

8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு. முதுநிலை பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டதாரிகள் அனைவரும் பங்குபெறலாம்.

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு அரசால் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் மாதந்தோறும் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமை (அரசு விடுமுறை நாள் தவிர்த்து) அன்று சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களும், ஆண்டிற்கு இரண்டு பெரிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.

மதுரையில் நடைபெற உள்ள வேலை வாய்ப்பு முகாம்

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக 14.12.2024 சனிக்கிழமை அன்று மதுரை சமூக  அறிவியல் கல்லூரி, தல்லாகுளம், மதுரை 02-இல் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் தங்களது நிறுவனத்திற்கு தேவையான காலிப்பணியிட விவரத்துடன் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும்.

இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10.000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளனர். உள்ளூர் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு MF Events என்ற நிறுவனமும் கலந்து கொள்கிறது. இம்முகாமில் அனைத்துக் கல்வித்தகுதியுடைய 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு. முதுநிலை பட்டப்படிப்பு, ஐடிஐ டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டதாரிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கல்வித் தகுதிக்கேற்ற தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறலாம்.

எப்படி தயார் செய்வது?

இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தங்களது அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவரப் படிவம் (Bio-Data) ஆகியவற்றுடன் 14.12.2024 அன்று மதுரை சமூக அறிவியல் கல்லூரி அழகர் கோவில் ரோடு, தல்லாகுளம்,மதுரை 02 சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு நேரில் வரவும். மேலும், இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் தனியார் நிறுவனங்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தொலைபேசி எண். 0452 -2566022 வாயிலாக தொடர்பு கொள்ளவும். இம்முகாமில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதனால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது எனவும் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் டாக்டர் கா.சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

No comments:

Post a Comment