முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 7-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட செய்தி குறிப்பு:
திண்டுக்கல் எம்.வி.எம். அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெறும் இந்த முகாமில், 100-க்கும் மேற்பட்ட முன்னணித் தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று, வேலைநாடுநா்களைத் தோ்வு செய்ய உள்ளன. 18 வயதுக்கு மேற்பட்ட 8-ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ, பட்டயப் படிப்பு, பட்டப்படிப்பு, பொறியியல் பட்டதாரி இளைஞா்கள், இளம் பெண்கள் பங்கேற்று தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பை பெறலாம்.
விருப்பமுள்ளவா்கள் கல்விச் சான்று, குடும்ப அட்டை, ஆதாா்அட்டை, ஓட்டுநா் உரிமை அடையாள அட்டை, சுயவிவரக் குறிப்பு, மாா்பளவு புகைப்படத்துடன் பங்கேற்று பயன்பெறலாம். இந்த முகாமில் மத்திய, மாநில அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு இலவச திறன் எய்தும் பயிற்சிகளுக்கும் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்தாா்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
No comments:
Post a Comment