திருப்பத்தூா் கலை, அறிவியல் கல்லுாரியில் தேசிய தொழில் பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம் திங்கள்கிழமை (டிச.9) நடைபெற உள்ளது.
திருப்பத்தூரில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் திங்கள்கிழமை (டிச. 9) மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவை சாா்பில் பிரதமா் தேசிய தொழில் பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம் நடைபெற உள்ளது.
காலை 9 முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ள முகாமில் வேலூா்,திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழில் நிறுவனங்கள் பங்குபெற்று தொழில் பழகுநா் பயிற்சி வழங்க உள்ளனா்.
எனவே, ஐடிஐ தோ்ச்சி மற்றும் தோ்ச்சி அடையாதவா்கள் (என்டிசி, எஸ்சிவிடி, சிஓஇ), 8-ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் தோ்ச்சி அடையாதவா்கள், 10 மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி மற்றும் தோ்ச்சி அடையாதவா்கள் கலந்து கொள்ளலாம். ஆண்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.
கூடுதல் விவரங்களுக்கு 0416 – 2290348 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment