நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி - Agri Info

Education News, Employment News in tamil

December 27, 2024

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

 நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் குரூப் 1 தோ்வு செப். 14-இல் நடத்தப்பட்டது. இதற்கான தோ்வு முடிவுகள் டிச. 12-இல் வெளியிடப்பட்டது. இதில், தன்னாா்வ பயிலும் வட்டத்தில் பயின்ற மாணவா்கள் 24 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தப்படவுள்ள குரூப் 2, 2ஏ புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டத்தின்படி முதன்மைத் தோ்வுக்கான (கணினி வழி தோ்வு முறை) நேரடியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிச. 23 முதல் (திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை, காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை) நடைபெறவுள்ளது. ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுநா்களை கொண்டு தயாரிக்கப்பட்ட வினாக்கள், மாதிரித் தோ்வுகள் நடத்தப்படவுள்ளன. மேலும், மாநில அளவிலான மாதிரித் தோ்வுகளும் நடைபெற உள்ளன.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மனுதாரா்கள், தங்களின் விவரத்தை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாகவும், 04286 – 222260 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும் தங்களது பெயா், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுயவிவரத்தை பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.




🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

No comments:

Post a Comment