பதப்படுத்தப்பட்ட உணவுகள் உங்கள் வயதை வேகமாக்குகிறதா..? ஆய்வில் அதிர்ச்சி தகவல் - Agri Info

Adding Green to your Life

December 13, 2024

பதப்படுத்தப்பட்ட உணவுகள் உங்கள் வயதை வேகமாக்குகிறதா..? ஆய்வில் அதிர்ச்சி தகவல்

 சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வின் மூலம், தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவு வேகமான வயது முதிர்வுக்கு காரணமாவதுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகளையும் வலியுறுத்துகிறது.

சிப்ஸ், பிஸ்கட், சாசேஜஸ், பர்கர்கள், குளிர்பானங்கள் மற்றும் இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் போன்ற தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிட விரும்புபரா நீங்கள்? அப்படியெனில், இனி ஜாக்கிரதையாக இருங்கள். இவை உயிரியல் ரீதியாக உங்களது வயதை வேகமாக்கும் என்று ஒரு ஆய்வு எச்சரித்துள்ளது.

ஒரு நபரின் உயிரியல் வயது என்பது, ஒரு நபரின் ஆரோக்கியத்தை அளவிடுவதற்கான புதிய வழியாகும். பல்வேறு மூலக்கூறு பயோமார்க்ஸர்களின் அடிப்படையில் ஒரு நபர் எவ்வளவு வயதானவராகத் தோன்றுகிறார் என்பதை இது குறிக்கிறது.


ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கொண்ட ஒருவருக்கு, அவர்களின் காலவரிசை வயதைக் காட்டிலும் உயிரியல் வயது குறைவானதாக இருக்கலாம், அதே சமயம் தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வது போன்ற மோசமான வாழ்க்கை முறை தேர்வுகள், உயிரியல் முதுமையை துரிதப்படுத்தும் என்று ஆஸ்திரேலியாவில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

ஏஜ் அண்ட் ஏஜிங் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், அமெரிக்காவில் இருந்து 20 முதல் 79 வயதுடைய 16,055 பங்கேற்பாளர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர் மற்றும் தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளின் நுகர்வு ஒவ்வொரு 10 சதவீத அதிகரிப்புக்கும், உயிரியல் மற்றும் காலவரிசை வயதுக்கு இடையிலான இடைவெளி தோராயமாக 2.4 மாதங்களுக்கும் விரிவடைகிறது என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

News18

தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளின் அதிக நுகர்வு கொண்ட பங்கேற்பாளர்கள் (அவர்களின் உணவில் உள்ள ஆற்றல் உட்கொள்ளலில் 68-100 சதவீதம்) உயிரியல் ரீதியாக குறைந்த அளவு பதப்படுத்தப்பட்ட உணவை எடுத்துக்கொண்டவர்களை விட 0.86 வயது மூத்தவர்கள் (அவர்களின் உணவில் 39 சதவீதம் அல்லது குறைவான ஆற்றல் உட்கொள்ளல்) என்பது தெரியவந்துள்ளது.

ஊட்டச்சத்து உயிர் வேதியியலாளரும், பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து, உணவுமுறை மற்றும் உணவுத் துறையின் மூத்த விரிவுரையாளரும், மருத்துவருமான பார்பரா கார்டோசோவின் கண்டுபிடிப்புகள் முடிந்தவரை பதப்படுத்தப்படாத மற்றும் குறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றார்.

“எங்கள் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் மிகப்பெரியது, எங்கள் கணிப்புகள் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவு நுகர்வு மூலம் மொத்த ஆற்றல் உட்கொள்ளலில் ஒவ்வொரு 10 சதவிகிதம் அதிகரிப்பிற்கும், கிட்டத்தட்ட 2 சதவிகிதம் இறப்பு ஆபத்து மற்றும் இரண்டு ஆண்டுகள் 0.5 சதவிகிதம் நாள்பட்ட நோய் அபாயம் உள்ளது என்பதைக் காட்டுகிறது.” என்று அவர் மேலும் கூறினார்.தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்பது பொதுவாக வீட்டு சமையலில் பயன்படுத்தப்படாத ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்கள், உயர் பிரக்டோஸ் கார்ன் சிரப், சுவை மேம்படுத்திகள் மற்றும் இரண்டு கலவைகளை கலக்கும் எமல்சிஃபையர்கள் போன்ற பொருட்களைக் கொண்ட தொழில்முறை உருவாக்கங்கள் ஆகும்.

இந்த உணவுகளில் அதிக உப்பு, சர்க்கரை, கொழுப்புகள் மற்றும் பிற ஆரோக்கியமற்ற கூறுகள் உள்ளன, மேலும் தேவைக்கு ஏற்பவும், பதப்படுத்தி நீண்ட நாள் பயன்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment